7 Nov 2016

தீரா ரசிகன்


சுத்தம்
கடைசியில்
காவிரி
சுத்தமானது
பொட்டு மணல் கூட
இல்லாமல்!
*****

நினைப்புகள்
பேசி விட்டு
மறந்துப் போவார்களே தவிர
வேறு எதுவும் நினைக்க மாட்டார்கள்
என்பது தெரிவதில்லை
மற்றவர்கள்
என்ன நினைப்பார்களோ என்று
நினைக்கும் மனதுக்கு!
*****

போதுமானது
இந்தத் தேசத்தில்
தூக்கிலிட்டுச் சாக
ஒரு விவசாயியாக இருப்பது
போதுமானது!
*****

தீரா ரசிகன்
சூப்பர் ஸ்டாருக்கு
பாலாபிஷேகம் செய்வான்
ஹன்சிகாவுக்கு
கோயில் கட்டுவான்
அவ்வபோது
திருட்டு டிவிடியில்
திரைப்படமும்
பார்த்துக் கொள்வான்
தீராத் தமிழ்த்திரை ரசிகன்!
*****

சுபிட்சம்


கப்பல்
கவிழ்ந்த கப்பலைப் பார்த்து கன்னத்தில் கை வைக்காமல், இன்னொரு கப்பலைச் செய்து மழைநீரில் விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்முக்குட்டி!
*****

நினைவு
கிராமத்திற்கு ஏதோ வேலையாய்ச் சென்றவன், "நீ கந்தசாமி மவன்தானே!" என்று கேட்ட போதுதான், நினைவுக்குக் கொண்டு வந்தான் முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வந்த தன் அப்பாவை!
*****

சுபிட்சம்
கணவன் இறந்த பின் சுபிட்சமானது லெட்சுமியின் குடும்பம் டாஸ்மாக் செலவொழிந்து.
*****

6 Nov 2016

பண்பாடு


பண்பாடு
"தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கிறதுதான் பாஸ் நம்மோட பண்பாடு!" ஊற்றிக் கொடுத்தான் குடித்துப் பழக்கமில்லாத குருசாமிக்கு, மொடாக் குடியனான முத்துசாமி.
*****

அடிக்காதே!
"கோபப்பட்டு யாரையும் அடிக்கக் கூடாது! புரியுதா?" என்று மகள் கனிகாவை அடித்துக் கொண்டிருந்தார் சித்தார்த்.
*****

தூக்கு
தொலைக்காட்சியில் ரியல் எஸ்டேட் விளம்பரம் ஓடிக் கொண்டிருக்க, சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை நிறுத்தி விட்டு, தூக்குப் போட்டுக் கொண்டார் விவசாயி அப்பாவு.
*****

கடவுளுக்குத் தெரியாமல்...


ஓட்டைகள்
விழும் இடத்தைப் பொருத்து
ஓட்டைகள்
மாயங்கள் செய்கின்றன!
படகில் விழும்
ஓட்டை
மூழ்கடிக்கிறது!
புல்லாங்குழலில் விழும்
ஓட்டை
இசையைச் சுரக்கிறது!
*****

தணிகைவேல் இடம்
தண்ணீர்ப் பஞ்சம்
தணிக்கும்
தண்ணீர்ப் பந்தல்
டாஸ்மாக்!
*****

கடவுளுக்குத் தெரியாமல்...
கோயில் புறாக்கள்
என்று தெரிந்தும்
பந்தயப் புறாக்களாய்
ஆக்க நினைக்கும்
மனசை என்ன செய்ய?
கர்ப்பகிரகத்து கடவுளிடம்
வேண்டிக் கொண்டு
கோடைக்காலத்தின்
அத்தனை கோச்சிங் சென்டர்
விண்ணப்பங்களையும் வைத்து
அர்ச்சனையை முடித்துவிட்டு
சுண்டு விரல் பிடித்து
நடந்து வரும் மகனோடு
நடக்கத் தொடங்குகிறேன்
இன்று சேர்க்க இருக்கும்
கோச்சிங் சென்டரை நோக்கி!
*****

5 Nov 2016

ஒருவனே தேவன்


புழுக்கம்
தன் ஹீரோ வந்த போதெல்லாம் கைதட்டி ஆர்ப்பரித்த ரசிகன் ரங்கபாஷ்யம், பாதியிலேயே வெளியில் வந்தான் தியேட்டர் புழுக்கம் தாங்காமல்.
*****

ஒருவனே தேவன்
"எல்லா மதமும் சொல்வது கடவுள் ஒருவனே. இது அவரவர் மத கடவுளை மட்டுமே கடவுள் என்று சொல்வது போலல்லவா இருக்கிறது!" என்றான் புரட்சிதாசன்.
*****

கண்டிப்பு
ஊர் சுற்றும் மகனைக் கண்டித்தார், அடிக்கடி கூத்தியாள் வீட்டுக்குச் சென்று வரும் அப்பா.
*****

இரசாயனச் சிந்தனைகள்


இரசாயனச் சிந்தனைகள்
தாய்ப்பாலும்
இல்லாமல் போனது
பசும்பாலும்
இல்லாமல் போனது
பாக்கெட் பால் குடிக்கும்
மனம் முழுவதும்
இரசாயனச் சிந்தனைகள்!
*****

செளகர்யங்கள்
"செளகர்யமா?"
என்றே தொடங்க
வேண்டியிருக்கிறது
செளகர்யமற்ற
உரையாடல்களையும்!
*****

அடையாளம்
ஏதோ ஒரு காலத்தில்
கட்டப்பட்ட பாலம்தான்
அடையாளப்படுத்திக் கொண்டு
இருக்கிறது
அதை நதியென!
அதுவும் சாக்கடையைச் சுமந்து
ஓடிக் கொண்டிருக்கிறது
ஏதோ விதியென!
*****

4 Nov 2016

என்கெளண்டர்


விடுதலை
முன் ஜாமீன் கேட்டுக் கிடைக்காத தலைவர் வடிவழகனுக்கு, பைல் காணாமல் போக, கிடைத்தது விடுதலை.
*****

சலிப்பு
தனக்கு வந்த எண்பத்து ஆறாவது குற்றப்பத்திரிகையைப் படிக்க படிக்க சலிப்பாக இருந்தது முன்னாள் அமைச்சர் முத்தரசனுக்கு.
*****

என்கெளண்டர்
என்கெளண்டரில் போட்டுத் தள்ள ஐந்து பேர் கொண்ட போலீஸ் படை தயாராக இருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு காலமானான் செயின் சேகர்.
*****