Showing posts with label Story notes. Show all posts
Showing posts with label Story notes. Show all posts

10 Jun 2025

கதைக் குறிப்புகள்

கதைக் குறிப்புகள்

நேற்று ஒரு கதை படித்தேன்

கதையின்படி நடக்க ஆரம்பித்தன சம்பவங்கள்

பாத்திரங்கள் உருள ஆரம்பித்தன

தத்துவங்கள் சத்தமிடத் துவங்கின

அவர்களுக்குப் பிடித்த மாதிரி

நீங்கள் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்

உங்களுக்குப் பிடித்த மாதிரி

யாரும் இருக்க மாட்டார்கள்

அப்படி இருப்பது மன உளைச்சல் என்றால்

நீங்கள் ஏன் அப்படி இருக்கிறீர்கள்

எப்படி இருந்தால் உங்களுக்கு

மன உளைச்சல் இருக்காதோ

அப்படியே இருங்கள்

புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது

உனக்கு என்ன நேர்கிறதோ

நீ என்ன உணர்கிறாயோ

அவை அனைத்தும் புதிது

எல்லாருக்கும் எல்லாமும் புதிதாக இருக்காது

உனக்குப் புதிதாக இருப்பது

இன்னொருவருக்கு பழையதாக இருக்கும்

இன்னொருவருக்குப் பழையதாக இருப்பது

உனக்குப் புதிததாக இருக்கும்

ஒருவருக்கு இருப்பது போலவே

எல்லாருக்கும் எல்லாமும் இருக்குமா என்ன

கதை முடிந்தது

ஆட்டம் காலி

படுதா மிச்சம்

வெறிச்சோடி கிடக்கும்

ஏகாந்த நிலப்பரப்பில்

சருகைச் சுழற்றி

விளையாடிக் கொண்டிருக்கிறது காற்று

*****