Showing posts with label Dealing the problems beyond philosophical wisdom!. Show all posts
Showing posts with label Dealing the problems beyond philosophical wisdom!. Show all posts

25 Jun 2025

தத்துவ ஞானத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளைச் சமாளிப்பது!

தத்துவ ஞானத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சனைகளைச் சமாளிப்பது!

சாக்ரடீஸே சமாளிக்க முடியாத பிரச்சனையைச் சமாளித்த அனுபவம் ஒன்று. இது போன்ற பிரச்சனைகளைச் சமாளிப்பது தத்துவ ஞானத்திற்கு அப்பாற்பட்டது என்றாலும் சமாளிப்பது சாதாரணப்பட்ட காரியம் இல்லை.

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் ‘கூலி’ என்று மனைவி சொன்ன போது நான் வாய் திறக்கவே இல்லை.

ஒருவேளை வாய் திறந்திருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

ரஜினி நடித்த படம் குறித்துத் தெரிந்தும் அந்தச் செய்தியை மறைக்கப் பார்த்தீர்களே என்பாள்.

அத்துடன் விடுவாளா என்றால், அதுதான் இல்லை! உன் குடும்பமே இப்படித்தான் எல்லாவற்றையும் மறைத்தே பழக்கம் என்பாள்.

மேலும், இப்படி எல்லாவற்றையும் மறைத்து மறைத்து என்னத்தைக் கண்டு விட்டீர்கள் என்பாள்.

நல்லவேளை தமிழகத்துக்கே தெரிந்த இச்செய்தியை நான் தெரியாதது போலக் காட்டிக் கொண்டது.

இது போன்ற பிரச்சனைகளைத் தத்துவத்தோடு இணைத்து தர்க்கம் பார்த்தால் பிரச்சனை தொலையாது. நாம்தான் தொலைய வேண்டியிருக்கும்.

மேலும், தெரியாதது போலக் காட்டிக் கொண்டு அப்பாவி போலத் தப்பித்துக் கொள்வது, வீரனாய்க் காட்டிக் கொண்டு காலில் விழுவதை விட மேலானதாக இருக்கிறது.

*****