அம்மரத்து அக்குருவிகள்
புது
வீடு கட்ட வேண்டும்
என்ற
அம்மாவின் ஆசைக்கு
அப்பா
ஆசையாய் நட்டு வைத்த
வேப்பமரத்தின்
மீது
கோடரியை
வைத்தார் பில்டர்
வீட்டைக்
கட்டி முடித்ததும்
அலைபேசியில்
அனைவரிடமும்
அது
பற்றி பேசி பேசி மாய்ந்து போது
அந்த
டவர் வழியே சென்று கொண்டிருக்கும்
சைகைகள்
வழி அறியாமலே
கீச்சிட்டுக்
கொண்டிருந்தன
அம்மரத்திலிருந்து
செல்போன்
டவருக்கு
வீடு
மாறிக் கொண்ட
அக்குருவிகள்
*****
