பறக்கும் பச்சை
பசுமரங்கள்
அனுப்பிய
பச்சை
பறந்து
கொண்டிருக்கின்றன
பச்சைக்
கிளிகளாய்…
*****
தத்ரூபம்
ஆயிரம்
லட்சம்
கோடி
பில்லியன்
பிக்சல்களில்
சிக்காத
தத்ரூபம்
கருப்பு
வெள்ளை
புகைப்படத்தில்
முறுவலிக்கும்
பாட்டியின்
புன்னகைக்கு
*****
காலம் உறைந்த கடிகாரம்
கறையான்
அரித்த
எஞ்சிய
புத்தகத்தைக் காட்டுவதைப் போல
உறைய
வைத்த காலத்தைக் காட்டியபடி
ஏதோ
ஒரு காலத்தில்
இனி
எதற்கும் உதவாது என்று
எடுத்துப்
போடப்பட்ட
பழுதான
கடிகாரம்
பழைய
பெட்டியொன்றின்
மூலையில்
கிடக்கிறது
இனி
நேரம் பார்க்க
ஆளிருக்க
மாட்டார்கள் என்றாலும்
நாளுக்கு
இரு முறை
சரியான
நேரம் காட்டும்
அக்கடிகாரத்திற்குத்
தெரியும்
அப்பா
சொன்ன ஒற்றை வார்த்தையால்
மாரடைப்பால்
உயிர் பிரிந்த
அம்மையின்
கரங்களிலிருந்து
நழுவி
விழுந்து
பழுதான
அந்த நேரம்
*****
