Showing posts with label Folklore. Show all posts
Showing posts with label Folklore. Show all posts

23 Apr 2025

ஒற்றைக்கை மாடன்

ஒற்றைக்கை மாடன்

சிதறிக் கிடக்கும் குஸ்கா துணுக்குகளைக்

கொத்தித் தின்று விட்டு

தலைக்கு மேல் பறந்து

பரட்பரட்டென்று

எச்சமிட்டுப் போனது

பருந்துக்குப் பயந்து பயந்து பறக்கும்

ஊர்க்குருவி!

கடந்து போன

எத்தனையோ பேரை

ரத்தவாந்தி எடுக்க வைத்து

மிரட்டிய சம்பவங்கள் எல்லாம் மறந்து

தன் கீழ் அமர்ந்து

தனக்குப் படையல் போட கூட

மனமில்லாமல்

பருகிக் கொண்டிருக்கும்

டாடா சுமோவில் வந்திறங்கிய

டாஸ்மாக் பிரியர்களைக்

கடைவாய் எச்சில் ஒழுக

ஏக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறது

உடைந்து போன ஒற்றைக் கையுடன்

வெறும் சிலையாகவே மாறி விட்ட மாடன்

******