Showing posts with label Don't do bad things just to get something done!. Show all posts
Showing posts with label Don't do bad things just to get something done!. Show all posts

2 Jun 2025

எதையாவது செய்ய வேண்டும் என்று கெடுதலைச் செய்யாதீர்கள்!

எதையாவது செய்ய வேண்டும் என்று கெடுதலைச் செய்யாதீர்கள்!

நீங்கள் எதிலும் தீவிரமாக இருப்பதில்லை!

நான் ஏன் தீவிரமாக வேண்டும்?

நானென்ன தீவிரவாதியா?!

*

இரத்தத்தையும் இதயத்தையும்

கொதிக்க வைக்கும் கோபம்

வெந்நீர் அடுப்பா?

*

ஒரு வீட்டில் எழுதியிருந்த விநோத வாக்கியம்

“பிள்ளைகள் ஜாக்கிரதை”

*

கண் விழிக்கும் முன்னே

கண் விழித்து விடுகிறது

கண் எரிச்சல்

வயிற்றெரிச்சல் அப்படியல்ல

கண் விழித்துப் பார்த்த பின்தான் ஆரம்பிக்கிறது

*

“நல்லது செய்ய முடியாவிட்டாலும் கெடுதல் பண்ணாமலாவது இரு!” என்பார்கள்.

இந்த வாக்கியம் ரொம்ப அருமையாக இருக்கிறதே என்று நினைக்காதவர்கள் இருக்க முடியாது. இந்த வாக்கியத்தைச் சொல்பவர்களை அனுபவஸ்தர்கள் என்றும் நினைக்கத் தோன்றலாம்.

இந்த வாக்கியம் இலக்கியத்திலிருந்து வாழ்க்கையின் வழக்குக்கு வந்த வாக்கியம்.

சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் இவ்வாக்கியத்தின் விழுமிய கருத்து இடம் பெறுகிறது.

பாடல் வரிகள் இதுதான்.

“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்

எல்லாரும் உவப்பது அன்றியும்

நல் ஆற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே” (புறநானூறு, 195 : 6, 9)

எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகக் கெடுதலைச் செய்து விடக் கூடாதல்லவா!

*****