Showing posts with label மனித இயல்பு. Show all posts
Showing posts with label மனித இயல்பு. Show all posts

17 Feb 2025

நெரிசல் பிராணிகள்

தண்ணீரில் வாழும் தாவரம்

நிரம்ப மழை பெய்து

நீர் தேங்கினால் அழுகி விடும் என்று

அழுது கொண்டே சொன்னாய்

நான் நீருக்குள் வாழும்

தாவரங்களை நினைத்துக் கொண்டேன்

*****

கருப்புக் கொடி

சூரியனுக்கு

ஒரு கருப்புக்கொடி

இந்த நிழல்

*****

நெரிசல் பிராணிகள்

கொட்டித் தீர்க்கிறது மழை

சுட்டெரிக்கிறது வெயில்

கூட்டங்களால் நிரம்பி வழிகிறது பயணம்

நெரிசல்களுடன் நிகழ்கின்றன

கடைவீதி அனுபவங்கள்

மனிதர்கள் பெருங்கூட்டத்தில்

நெருக்கி அடித்துக் கொண்டு வாழும் பிராணிகள்

*****