30 Mar 2022

பறவையாக மாறி பறத்தல்

பறவையாக மாறி பறத்தல்

தானாகப் பறந்து வந்து

ஜன்னல் கம்பிகளில் அமர்ந்த பறவை

நலம் விசாரிப்பதைப் போலத் தோன்ற

என்னையும் அறியாது மனதார நன்றி சொன்னேன்

மற்றொரு நாளில்

இருசக்கர வாகனக் கண்ணாடியைக்

கொத்திக் கொண்டிருந்த பறவையொன்று

என்னைத் தொட்டு நலம் விசாரிப்பது போலத் தோன்ற

கண்களை மூடி நன்றி சொல்லும்

பிரார்த்தனைக்குள் ஆழ்ந்தேன்

திடீரென ஒரு மழைநாளில்

நடுக்கூடத்தில் கூடிக் கூச்சலிட்ட குருவிகள்

ஆனந்த நடனம் புரிவதைப் போலத் தோன்ற

பரவசமாகி நன்றி நன்றியெனப் புலம்பியபடி இருந்தேன்

பிறிதொரு நாள் தோளில் வந்தமர்ந்த பறவை

நான் சொல்லிய நன்றிக்கெல்லாம்

நன்றி சொல்வது போலத் தோன்ற

நானுமொரு பறவையாகி வானில் பறந்து கொண்டிருந்தேன்

*****

28 Mar 2022

குறிப்பொதுங்கி ஓடும் வரலாறு

குறிப்பொதுங்கி ஓடும் வரலாறு

அதன் சுற்றுப்பயணம் அங்கேயே இருக்கிறது

தினமும் சுற்றுகிறது பல கிலோ மீட்டர் வேகத்துக்கு

என்றாலும் அங்கேயே தொடங்கி

அங்கேயே முடிகிறது அதன் சுற்றுப்பயணம்

மையத்தை விட்டு விலகிச் செல்லும் சுதந்திரம்

அதன் சுற்றுப்பயணங்களுக்கு இல்லை

கடிகாரத்தின் சுற்றுப்பயணம் போல்

மின்விசிறியின் சுற்றுப்பயணம் போல்

சுற்றுப்பயணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன

ஈர்ப்புத்தன்மையை இழந்து விட்ட காந்தம்

மண்ணில் புரண்டு புரண்டு காணும்

ஏமாற்றங்களைச் சந்திக்கின்றன அதன் பிரதானத் திட்டங்கள்

தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன

சுற்றுப்பயணங்களுக்கான பரிவாரக் கூட்டங்கள்

திருப்தி அடைவதோடு முடிந்து விடுவதோடு

ஒவ்வொரு நாளும் விடிந்து மறைகின்றன

என்னவோ எதுவோ ஏட்டில் எழுதிக் கொள்ளும்

வரலாறு காத தூரம் ஓடிக் கொண்டிருக்கிறது

வேறு ஒருவரின் சுற்றுப்பயணங்களைக் குறிப்பெடுத்தபடி

*****

24 Mar 2022

நம் வாழ்வை நாமே தீர்மானிக்கிறோம்!

நம் வாழ்வை நாமே தீர்மானிக்கிறோம்!

            ஒரு செயலைச் செய்வதற்கு விருப்பத்தைப் போல மந்திர சக்தி ஏதும் கிடையாது. விருப்பமில்லாத செயலைச் செய்ய முடியாது. விருப்பத்தின் ஆற்றல் மகத்தானது. விருப்பமானது மலையைப் போன்ற காரியங்களைத் துரும்பைப் போலக் கருதி காரியங்களைச் செய்ய வைக்கும். விருப்பமில்லாத ஒரு காரியம் துரும்பளவு இருந்தாலும் அது மலையளவாக மாறி விடும்.

            பிடித்திருந்தால் எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்வார்கள்தான். வாழ்க்கை அப்படித்தான் அமையும் என்று சொல்வதற்கில்லை. பிடிக்காத வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும். விருப்பம் இல்லை என்ற காரணத்திற்காக அந்த வேலையைச் செய்யாமல் இருக்க முடியாது.

            பல நேரங்களில் விருப்பங்களையெல்லாம் மூட்டைக் கட்டி தூர வைத்து விட்டுதான் காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு இல்லாவிட்டால் வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

            நாம் விரும்பாத காரியங்களை நெருக்கடிகள் செய்ய வைத்து விடும். இது குறித்த தீர்க்கமான பார்வையை உருவாக்கிக் கொள்வது நல்லது. எந்தெந்த காரியங்களைச் செய்யாமல் விட்டால் வாழ்வின் பிற்பகுதியில் நெருக்கடிகளை உருவாகுமோ அவற்றைச் செய்து முடித்து விடுவதுதான் நல்லது. அங்கே விருப்பமின்மையைக் காரணம் காட்டி அந்தக் காரியத்தைத் தள்ளிப் போடுவதோ செய்யாமல் போடுவதோ நல்லதல்ல.

            அவரவர்கள் வாழ்க்கையை அவரவர்கள் ஆள வேண்டும் என்றால் நெருக்கடிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. நெருக்கடிகளுக்கு இடம் கொடுக்க ஆரம்பித்தால் பின் நெருக்கடிகளே நம்முடைய வாழ்க்கையை ஆண்டு கொண்டிருக்கும். நாம் நெருக்கடியின் கைப்பிள்ளையாக மாறியிருப்போம். நாளடைவில் நெருக்கடியின் கைப்பாவையாகவும் மாறி விடுவோம்.

            ‘இளமையில் கல்’ என்பது நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லி சென்ற காலக்கடமைக்கான அற்புதமான வாசகம். இளமையிலேயே செய்து முடிக்க வேண்டிய அந்த அற்புதமான காரியத்தை விருப்பமின்மையைக் காரணம் காட்டிப் புறந்தள்ளினால் அது உண்டாக்கும் நெருக்கடிளுக்கு ஏற்பவே வருங்காலத்தை நாம் நகர்த்த வேண்டியிருக்கும்.

            உடற்பயிற்சிக்கும் உடலோம்பலுக்கும் நேரம் ஒதுக்குங்கள் என்ற சமிக்ஞைகள் உங்களிடமிருந்தோ அல்லது உங்கள் நலனில் அக்கறை மிகுந்தோரிடமிருந்தோ வெளிப்பட்டு விட்டால் அது கண்டிப்பாக செய்தே ஆக வேண்டிய காரியம்தான். விருப்பமில்லை, நேரமில்லை என்பதைக் காரணம் காட்டி அதைப் புறந்தள்ள முடியாது. ஒருவேளை புறந்தள்ளினால் சர்க்கரை நோயோ, ரத்த அழுத்த மாறுபாடோ, கொழுப்பு நோயோ வந்து நெருக்கடியை உண்டு பண்ணி எந்தக் காரியத்தை விருப்பமின்மையைக் காரணம் காட்டித் தள்ளிப் போட்டீர்களோ அதைச் செய்ய வைத்து விடும்.

            வாழ்க்கையில் அவசியமான அத்தியாவசியமான ஒரு சில காரியங்கள் இருக்கின்றன. அக்காரியங்களை ஆற்றுவதில் நம்முடைய பிடித்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ அது பொருட்டேயல்ல. அந்தக் காரியங்களை அந்தந்த நேரத்தில் செய்து முடித்து விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப்படிப் போய்க் கொண்டிருந்தால் வாழ்க்கையும் இணக்கமாகவும் இன்பமாகவும் போய்க் கொண்டிருக்கும்.

            நம்முடைய வாழ்க்கை இணக்கமாகப் போய்க் கொண்டிருக்க வேண்டுமா அல்லது நெருக்கடிகளோடு போய்க் கொண்டிருக்க வேண்டுமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த விசயம் நிச்சயம் நம்முடைய அணுகுமுறையால் உண்டாவதுதான். நாம் நினைத்தால் நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். நம்முடைய விருப்பங்களை தகவமைத்துக் கொள்வதில் நாம் நம் அற்புதமான கவனத்தைச் செலுத்திதான் ஆக வேண்டும்.

*****

23 Mar 2022

நம்பிக்கைகள் நிரந்தரமானவை

நம்பிக்கைகள் நிரந்தரமானவை

            தமிழகத்தில் ‘எண்ணம் போல் வாழ்வு’ என்ற அனுபவ வாசகத்தை ஆட்டோக்களின் பின்புறம் காணலாம். எண்ணற்றோர் சொல்லும் அற்புத வாசகம் அது.

            நம்பிக்கையோடு எண்ணுபவர்களின் வாழ்க்கைப் பிரகாசமாகத்தான் இருக்கிறது. அவநம்பிக்கையாளர்கள் அவஸ்தைப்படுகிறார்கள்தான்.

            நம்பிக்கையோடு எண்ணுபவர்கள் எல்லாம் பிரகாசமாகவா இருக்கிறார்கள் என்பதில் ஐயப்பாடே வேண்டியதில்லை. அது அப்படித்தான். மாற்ற முடியாத ஒன்று. நம்பிக்கை என்றால் முழுமையான நம்பிக்கை. அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

            நண்பர்களிடம் நம்பிக்கையோடு பேசும் சிலர் குடும்ப வாழ்க்கையில் சங்கடங்களைச் சந்திப்பவர்களாக இருக்கலாம். இங்கே நம்பிக்கையின் விதி பொய்த்து விட்டதா என நீங்கள் கேட்கலாம்.

நம்பிக்கையின் விதி எங்கேயும் பொய்ப்பதில்லை. நீங்கள் அவர்களை உற்றுக் கவனித்தால் ஓர் உண்மையைக் கண்டறியலாம். நண்பர்களிடம் நம்பிக்கையோடு பழகும், பேசும் அளவுக்கு அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களோடு இருக்க மாட்டார்கள் என்பதுதான் அந்த உண்மை. அதனால்தான் நான் முழுமையான நம்பிக்கை என்பதையும் அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை என்பதையும் அழுத்தம் கொடுத்துக் குறிப்பிட்டேன்.

உறவுகளிடம், நண்பர்களிடம் நம்பிக்கையாகப் பேசுபவர்கள் கூட அரசியல் குறித்து எதிர்மறையாகப் பேசுவார்கள். அந்த அவநம்பிக்கையான உணர்வுகளும் சிந்தனைகளும் ஏதோ சில விசயங்களில் அவர்களின் வாழ்க்கையில் பிரதிபலித்தே தீரும்.

நீங்கள் கேட்கலாம், வாழ்க்கையில் அவநம்பிக்கையே தேவையே இல்லையா என்று? ஆமாம் அது தேவையில்லை. எல்லா அவநம்பிக்கைகளும் நம்பிக்கையாக மாறுவதைத் தவிர அவற்றுக்கு வேறு வழியில்லை. அவநம்பிக்கைகளோடு தொடர்புடைய அனைத்தும் தற்காலிகமானவை. நீண்ட காலத்துக்கு அவை நீடிக்க முடியாது. நம்பிக்கையே நிரந்தரமானது. தொடர்ந்து நீடிக்கக் கூடியது.

குறுகிய காலமாகவும் தற்காலிகமாகவும் நீடிக்கும் அவநம்பிக்கைகளில் நாம் காட்டும் ஈர்ப்பை நிரந்தரமான நீடித்த நம்பிக்கையில் காட்ட வேண்டும். வாழ்க்கையும் வரலாறும் நமக்குச் சொல்லும் பாடம் அதுதான்.

இந்த உலகம் மட்டுமல்லாது இந்தப் பிரபஞ்சமே நம்பிக்கையோடு நீடித்தும் நிலைத்தும் இருக்கிறது. அவநம்பிக்கைகள் அவ்வபோது வந்து வந்து போகின்றன. அவ்வபோது வந்து வந்து போகும் அவநம்பிக்கைகள் மேல் நாம் ஈடுபாடு காட்ட வேண்டியதில்லை.

புயலோ, வெள்ளமோ, பூகம்பமோ, பேரிடர்களோ நெடுங்காலம் நீடித்து விடாது. அவற்றின் காலம் குறுகியது. அமைதியும் நம்பிக்கையும்தான் நெடுங்காலம் நீடிக்கக் கூடியது.

நம் வாழ்க்கை வளமையாலும் செழுமையாலும் ஆனது. நமது வாழ்வின் வளமையையும் செழுமையையும் நம் நம்பிக்கை எப்போதும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்பிக்கையின் நிழலில் ஓய்வும் அமைதியும் கொள்ள வேண்டியதுதான். நம்பிக்கைகள் எப்போதும் நிறைவேறும், எப்படியும் நிறைவேறும்.

*****

21 Mar 2022

அதி அற்புதமான பேச்சாளர் நீங்கள்!

அதி அற்புதமான பேச்சாளர் நீங்கள்!

            அனைவரும் விரும்பும்படி பழகுவது ஒரு கலை. அது வாழ்வின் அழகியல். விரும்பும்படி பழகுவதில் முக்கியமான கூறு பேச்சு. விரும்பும்படி பழகுவதில் விரும்பும்படி பேசுவதுதான் முதன்மையானது.

            விரும்பும்படி பேசத் தெரியாத போது அதை ஒரு குறையாகக் கொள்ள வேண்டியதில்லை. விரும்பும்படி பேசுவதை விட கூடுதலாக அனைவரையும் விரும்ப செய்வதற்கான மாபெரும் நுட்பம் ஒன்று இருக்கிறது. பேசாமல் இருப்பதுதான் அந்த மாபெரும் நுட்பம். நாம் பேசாமல் எதிரில் இருப்பவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மட்டும் இருங்கள். அனைவரும் விரும்பும் நபராக நீங்கள் மாறி விடுவீர்கள்.

            இருப்பால் மட்டுமல்ல இன்மையாலும் கிடைக்கும் சிறப்பு பேச்சுக்கு மட்டும்தான் உண்டு. கவர்ச்சிகரமான பேச்சின்மை குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. கவர்ச்சிகரமான பேச்சை விட பேசாமல் இருப்பது ஆயிரம் மடங்கு கவர்ச்சி வாய்ந்தது.

            மற்றவர்கள் பேசும் போது நன்றாகக் கவனியுங்கள். அவர்களின் குரலை உற்றுக் கேளுங்கள். அது ஆயிரம் மடங்கு நீங்கள் அவர்களிடம் பேசியதற்குச் சமம். பேச்சின் மூலம் கவர்வதை விட அவர்களின் பேச்சைக் கவனிப்பதன் மூலம் மிக அதிகமாகவே கவரலாம்.

            எல்லாருக்கும் அவர்களின் பேச்சைக் காது கொடுக்கும் ஒரு மனிதர் தேவைப்படுகிறார். அந்த நபர் ஏன் நீங்களாக இருக்கக் கூடாது? இதனால் பேசாமலே பேசிச் சாதிப்பதை விட அதிகம் உங்களால் சாதிக்க முடியும்.

            மிகக் குறைவாகப் பேசுவது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. பேச்சுக் கலையின் அற்புதமே மிகக் குறைவாகப் பேசுவதில்தான் இருக்கிறது. மிக அதிகமாகப் பேசுவது உங்கள் பேச்சை எப்போதும் சுவாரசியம் ஆக்காது.

            பேசுவதற்கு முன் அனைவரும் விரும்பும்படி பேச முடியுமா என்று பாருங்கள். அப்படிப் பேச முடிந்தால் பேசுங்கள். இல்லாவிட்டால் பேசாமலே இருந்து விடுங்கள். அதிகமான நபர்களால் நீங்கள் விரும்பப்படுவீர்கள்.

            பேசியே ஆக வேண்டும் நீங்கள் விருப்பபட்டால் நலமா, நன்று, நன்றி, சிறப்பு, அருமை, உங்களால் முடியும், உங்கள் மேல் நம்பிக்கை உண்டு என்பன போன்ற சொற்களும் வாக்கியங்களும் மட்டுமே போதும் உங்களுக்கு. எந்தத் தலைப்பிலான உரையாடலாக இருந்தாலும் சொற்பொழிவாக இருந்தாலும் யாரிடம் பேசுவதாக இருந்தாலும் இவையே போதும் உங்களுக்கு. உங்கள் அற்புதமான பேச்சை இந்தச் சொற்களையும் வாக்கியங்களையும் கொண்டே நீங்கள் அமைத்துக் கொள்ள முடியும்.

வெகு முக்கியமாக இந்தச் சொற்களையும் வாக்கியங்களையும் கொண்டு உங்கள் பேச்சை நீங்கள் அமைத்துக் கொண்டால் உங்கள் பேச்சை யாராலும் குறை சொல்ல முடியாது. அனைவராலும் விரும்பப்படும் பேச்சாக உங்கள் பேச்சு அமைந்து விடும்.

இந்தப் பேச்சின் சிறப்பே நன்மையை மட்டும் பேசுவதுதான். நாட்டில் நன்மையை மட்டும் பேசுபவர்கள் குறைந்து விட்டார்கள் என்பதால் இந்தப் பேச்சு வெகு சிறப்பாக உங்களை அடையாளம் காட்டும். உங்களைப் பலரையும் விரும்ப வைக்கும். இதற்கு மேல் சொற்கள் தேவைப்பட்டால் ஆகா, அற்புதம், சிறப்பு, மகிழ்ச்சி என்பன போன்ற சொற்களையும் அச்சொற்களைக் கொண்ட வாக்கியங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு உலகின் அதி அற்புதமான பேச்சாளர் நீங்கள்தான்.

*****

20 Mar 2022

நன்றியுணர்வின் அற்புதம்

நன்றியுணர்வின் அற்புதம்

            நன்றியுணர்வின் பிள்ளைகளாக நாம் இருக்கும் வரை நாம் அற்புதமானவர்கள்தான். நன்றியுணர்வு வெறுப்புணர்வை அறவே துடைத்தெறிந்து விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நேர்மறை உணர்வாக மாற்றி விடுகிறது.

            நன்றியுணர்வில் இவ்வளவு அற்புதங்கள் நிறைந்திருக்கும் என்பதை நான் எப்படி இத்தனை நாள்கள் அறியாமல் இருந்தேன்? புத்தகங்களும் தொடர் வாசிப்பும் நான் சந்தித்த மனிதர்களும்தான் அதன் அற்புதத்தை எனக்குப் புரிய வைத்தார்கள்.

            “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

            செய்நன்றி கொன்ற மகற்கு.”       (குறள். 110)

என்ற குறட்பாவின் உள்ளார்ந்த பொருள் என்னவாக இருக்கும் என்று மீண்டும் மீண்டும் என் மனதில் அசைப் போட்டுப் பார்த்த பிறகுதான் நான் புரிந்து கொண்டேன். திருவள்ளுவர் மனித குலத்திற்கான அற்புதமான மந்திர வாசகத்தை வழங்கியிருக்கிறார் என்பதை இந்த குறட்பாவைக் கொண்டு நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

            ஒவ்வொரு மனிதருக்கும் அவரவரது மனம்தான் மாபெரும் உய்வு. ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான மனநிறைவையும், மன அமைதியையும் அவரவரது மனம்தான் வழங்க முடியும்.

            நாம் நன்றியுணர்வோடு இருக்கும் அளவைக் கொண்டே நமக்கான மன அமைதியையும் மன நிறைவையும் நமது மனம் வழங்குகிறது. மனதார நன்றியைத் தெரிவிக்காத போது, மனதார நன்றியோடு நடந்து கொள்ளாத போது மனம் தன்னைத் தானே நரகமாக மாற்றிக் கொள்கிறது. நன்றியோடு நடந்து கொள்ளத் துவங்கும் போது மனம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத் தானே சொர்க்கமாக மாற்றிக் கொள்கிறது.

            உய்வில்லாத ஓர் இடம்தான் நரகம். உய்வை வழங்கக் கூடிய ஓர் இடம்தான் சொர்க்கம். சொர்க்கத்தை விரும்புவதற்குக் காரணம் அந்த இடம் தரக்கூடிய உய்வுதான். நரகத்தை நாம் விரும்ப முடியாமைக்குக் காரணம் நரகம் தரும் உய்வற்ற தன்மைதான்.

            நன்றியுணர்வுள்ள மனம் தான் கொண்டுள்ள நன்றியுணர்வால் படிப்படியாக சொர்க்கத்தை நோக்கி நகர்ந்து சொர்க்கமாகவே ஆகி விடுகிறது. நன்றி உணர்வை இழந்து விடும் மனம் படிப்படியாக நரகத்தை நோக்கி நகர்ந்து நரகமாகவே ஆகி விடுகிறது.

            நன்றியுணர்வற்ற தன்மையைத் திருவள்ளுவர் கொலைத் தன்மையோடு ஒப்பிட்டுக் கூறுவதை நாம் கவனிக்கலாம். நன்றியைக் கொல்லுதல் என்ற சொற் பயன்பட்டால் அதைச் சுட்டுகிறார். செய்நன்றியைக் கொன்றவர்க்கு உய்வில்லை என்றுசொல்வதன் மூலம் அப்படிப்பட்டவர்களை அவர் நரகத்தை நோக்கித் தள்ளி விட்டு விடுகிறார். அந்த நரகம் என்பது அவரது மனமே உருவாக்கித் தரும் நரகம்தான் என்பது அனுபவப்படும் போது புரியும்.

            நன்றிணர்வுள்ள மனதால் மட்டுமே குற்ற உணர்வினின்று விடுபட முடியும். எதிர்மறை எண்ணங்களால் தாக்குறாமல் இருக்க முடியும். நீங்கள் ஒவ்வொன்றிற்கும் நன்றியோடு இருந்து பாருங்கள். மனக்குறைகள் மாயமாய் மறைவதை அறிய முடியும். எவையெல்லாம் நன்றியற்றனவோ அவற்றை விட்டு விடுங்கள், மறந்து விடுங்கள். நன்றிக்கு உரியவை எவையோ அவற்றை மட்டும் நினைந்து நினைந்து நன்றி பாராட்டுங்கள்.

உங்களுக்குத் தேவையான அனைத்து நேர்மறையான உணர்வுகளும் நன்றியுணர்விலிருந்து பிறப்பவைதான். தன்னம்பிக்கை, ஊக்கம், முயற்சி, மனம் தளராமை, அஞ்சாமை, கருணை, அன்பு, பொறுமை, செழிப்பு என்று அனைத்தும் நன்றியுணர்வால் உண்டாக வேண்டியவை. உங்களது நன்றியுணர்வு உங்களுக்குத் தேவையான அனைத்து நல்லவை மற்றும் நேர்மறை உணர்வுகளை நீங்கள் கேட்காமலே உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். ஏனென்றால் நன்றியுணர்வு என்பது அற்புதமானது, அற்புதங்களைப் புரிய கூடியது. இந்த உண்மையை இன்னொருவர் சொல்லிப் புரிந்து கொள்ள முடியாது. உங்களால் உங்கள் மனதால் அனுபவித்துப் பார்க்கும்தான் புரிந்து கொள்ள முடியும். அந்த அற்புதமான அனுபவத்தை நீங்கள் ஏன் இன்றிலிருந்து துவங்கக் கூடாது. ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்லிப் பாருங்கள். அற்புதமான தருணங்களையும் உணர்வுகளையும் உணருங்கள்.

*****

19 Mar 2022

போதும் என்ற வாசகம்

போதும் என்ற வாசகம்

            செலவை எப்படிக் கட்டுக்குள் வைப்பது என்று என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்த வரையில் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மனிதனாக நான் தெரிகிறேன். ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்கும் மனிதனாகவும் பல நேரங்களில் நான் அவர்களுக்குத் தெரிகிறேன்.

            இதற்கான மெனக்கெடல் மற்றும் திட்டமிடல் ஏதோ என்னிடம் இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி ஏதும் என்னிடம் இல்லை. எனக்கு எவ்வளவு தேவையோ அதைத் தாண்டி அதிகப்படியாக நான் சிந்திக்க விரும்புவதில்லை. இச்சிந்தனை நமது மூதாதையர்கள் தந்த சிந்தனையிலிருந்து வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

            நம் மூதாதையர்கள் சொன்ன, “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற வாசகம் எப்போதும் என் மனதில் இருக்கிறது. வாழ்க்கையில் மிக உயர்ந்த பொன்னைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். தங்கத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள். பொக்கிஷத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். ஆனால் அந்தப் பொக்கிஷம் தங்கத்தில் இல்லை என்று சொல்வதன் மூலம் அவர்கள் நம் வாழ்க்கைக்கு மகத்தான வழிகாட்டலைச் செய்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டலுக்காக அவர்களுக்கு நான் எப்போதும் நெஞ்சார்ந்த நன்றிகளைப் பல நேரங்களில் என்னையும் அறியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

            அவர்கள் தந்த அற்புதமான வாசகம் மிதமான வேகத்தில் வண்டியைச் செலுத்த உதவும் வேக கட்டுப்பாட்டுக் கருவியைப் போல பல நேரங்களில் எனக்கு உதவுகின்றது. என்னுடைய முயற்சி, உழைப்பு, செல்வம், மகிழ்ச்சி என்று எல்லாவற்றிலும் போதும் என்கிற வரம்பும் அளவும் இருப்பதை அவர்கள் தந்த வாசகத்தால் உணர்கிறேன். பெரும்பாலும் அந்த அளவோடு நான் நிறுத்திக் கொள்கிறேன்.

            அவர்கள் தந்த வாசகம் மேலும் பல விளைவுகளை என் வாழ்க்கையில் உண்டாக்கி விட்டது. என்னை ஒரு மாபெரும் செல்வந்தனாக ஆக்குவதிலிருந்து தடுத்து விட்டது. என்னை அளவுக்கதிகமாக முயற்சி செய்யாமல் உழைக்க விடாமலும் செய்து விட்டது. அந்த வாசகத்தின் பின்விளைவு என்று இதைக் குறிப்பிடலாம். ஆனால் எனக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்குப் பெற்றுக் கொள்ள எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

            ஒவ்வொரு காரியத்தைத் துவங்கும் போதும் நான் போதும் என்ற அளவைத்தான் தீர்மானித்துக் கொள்கிறேன். அந்த வாசகம் சக்தியைத் தாண்டி செயலாற்றாமல் இருப்பதன் அவசியத்தை எப்போதும் எனக்குச் சொல்கிறது. எனக்குப் போதுமான அளவு எவ்வளவோ அந்தச் சக்தியின் அளவுக்குள் மட்டும் இருத்திக் கொள்ள அந்த வாசகம் எனக்கு எப்போதும் வழிகாட்டுகிறது.

            குறிப்பாக ஒரு சில விசயங்களை நான் சுட்டிக் காட்ட முடியும். அந்த வாசகம் எனக்கு மூன்று வேளை உணவு போதும் என்கிறது. இடையிடையே சிற்றுண்டியோ தேநீரோ தேவையில்லை என்று கூறுகிறது. அந்த வாசகம் எனக்குத் தந்த தாக்கத்தால் நான் அவற்றை விட்டு பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பல நேரங்களில் அந்த வாசகம் என்னைச் சோதித்துப் பார்த்து இன்றைக்கு இரண்டு வேளை உணவு கூட போதுமானது என்கிறது. அது போன்ற நாட்களில் நான் இரண்டு வேளை உணவோடு நிறுத்திக் கொள்வதும் உண்டு.

            அந்த வாசகம் மேலும் எவ்வளவோ பாடங்களை எனக்குச் சொல்கிறது. நான் வைத்துக் கொள்ள வேண்டிய ஆடைகளின் எண்ணிக்கை, நான் சேர்த்துக் கொள்ள வேண்டிய நண்பர்களின் எண்ணிக்கை, உறவினர்களின் எண்ணிக்கை, ஒரு விழா என்றால் கூட்ட வேண்டிய நபர்களின் எண்ணிக்கை என்று எவ்வளவோ சொல்கிறது.

ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும் நான் அந்த வாசகத்திடம் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் எப்போதும் கேட்டுக் கொள்கிறேன். அந்த வாசகம்தான் எனக்குச் செலவுகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறது. அந்த வாசகத்தின் வழிகாட்டல்களுக்காக நான் எப்போதும் நன்றியைச் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். உங்களுக்கும் அந்த வாசகம் பயன்பட்டால் நான் இன்னும் கூடுதலாக அந்த வாசகத்துக்கு நன்றியைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் வாழ்க்கையை மாற்றிய வாசகங்களில் அந்த வாசகத்திற்கு அதிகமான பங்கிருக்கிறது. மகத்தான வாசககமாக என் வாழ்க்கையை வழிகாட்டும் வாசகம் அது. அந்த வாசகத்தாலே வாழ்க்கையில் நான் பெரிதாக வளர்ந்து விடவும் இல்லை என்ற எண்ணம் இல்லாமலும் பெரிதாக வளர்ந்து விட வில்லையே என்ற ஏக்கமும் இல்லாமல் இருக்கிறேன். அப்படி ஒரு மன அமைதியைத் தரும் வாசகத்தை வேறெந்த வாசகத்திலும் தரிசித்ததில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

*****

17 Mar 2022

My two-wheeler experiences so far

My two-wheeler experiences so far

I have a lot of experience with having a two wheeler very badly. Too bad it can be said to be bad. As a result, I was unable to drive my two-wheeler and had to sell it at a very low price.

Then if I go somewhere on a two-wheeler friends will gather to see my vehicle. It's on me to see the beauty of driving or the beauty of the vehicle. I'm pure zero in both of those areas.

Friends would gather like that just to see the dirt and dust sticking to my vehicle. Friends will be surprised to see that how enormous is just dust and dirt in my vehicle. Even though it would have been like that if I had not wiped the vehicle on the day count, I still have no idea how my vehicle was a lot of dirty top of it.

I have almost kept both vehicles so bad that I have gone to the point of not being able to use both. No one in my family is like this. But I was like this. Great thing if I have been using a two wheeler as an item for two to three years.

The TVS 50 that my dad bought in 1996 used until 2017. If he had gone his way he would have been using it until now. We were the ones at home want changing that vehicle.  We changed it to Excel 100. Even then he did not change to the Scooty type and switched to the model he used.

The experience on a two-wheeler has now changed me. I have to say that I maintain the vehicle I bought a third time a little more carefully. I wipe it off every morning before operating the it. I take the vehicle to the service department probably once every three or four months and maintain it well. They change what needs to be changed, remove what needs to be removed, and add what needs to be added to make the vehicle look like new every time. My special thanks to them always.

Experience has shown that the brake shoes of the vehicle should be tested from time to time and the brake pads should be adjusted to suit the movement of the vehicle. That means its movement must be flexible when pushing the vehicle. I will tell you when you leave the vehilce in service to make the necessary changes to the vehicle accordingly. I replace the tires with a three-quarter of eroision. I still have two or three months to deal with rubbed tires but I will replace them.

One important thing to say is if the tires have been correct pressure for more than the last nine months. I do not understand how athletically its corresponding air pressure remains unchanged to this day. Is in the correct pressure position whenever tested.

The technique of clearing the vehicle brightly is not enough for me at all. The vehicle gets a flash when the diesel is put out. Occasionally when a sudden happiness is born in the mind, buys diesel and comes and does the cleaning work. Although it counts once a month or a year, that work never changed.

The average speed of my riding is 30 km per hour. Never exceeded the speed of 35 km per hour. No matter what road it is, it is 35 km speed is my habit. That Speed ​​is the maximum speed of me. The noise of the vehicle is the same until now. The noise is still the same as when I picked up the car in the morning.

Each of these experiences continues to develop us. Tell us about your two-wheeler experiences too. Can be used by many. Tell me what virtue is like saying what is useful. Valluvar says, "Seek good words that increase virtue" (Kural. 96).

*****

இதுவரை என் இரு சக்கர அனுபவங்கள்

இதுவரை என் இரு சக்கர அனுபவங்கள்

            இரு சக்கர வாகனத்தை மிக மோசமாக வைத்திருந்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு. மோசமாக என்றால் படுமோசமாக என்றும் சொல்லலாம். அதன் காரணமாக எனது ஒரு இரு சக்கர வாகனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு அதை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

            அப்போதெல்லாம் நான் எங்காவது இரு சக்கர வாகனத்தில் சென்றால் எனது வாகனத்தைப் பார்க்க நண்பர்கள் கூடி விடுவார்கள். அது நான் வாகனம் ஓட்டி வரும் அழகைப் பார்ப்பதற்கோ, வண்டியை அழகாக வைத்திருப்பதைப் பார்ப்பதற்கோ அன்று. அந்த இரண்டு விசயக்கூறுகளிலும் நான் சுத்த பூஜ்யம்தான்.

            எனது வண்டியில் ஒட்டியிருக்கும் அழுக்குகளையும் தூசுக்களையும் பார்க்கத்தான் நண்பர்கள் அப்படி கூடுவார்கள். அதெப்படி இவன் வண்டியில் மட்டும் இம்மாம் தூசுக்களும் அழுக்குகளும் என்று பார்க்கும் நண்பர்கள் ஆச்சரியப்பட்டு விடுவார்கள். நாள் கணக்கில் வண்டியைத் துடைக்காமல் வைத்திருந்தால் அப்படித்தான் இருக்கும் என்றாலும் என் வண்டி அதற்கும் மேல் இருந்தது எப்படி என்பது எனக்கு இன்று வரை புரியாத ஆச்சரியம்தான்.

            கிட்டதட்ட இரண்டு வண்டிகளை மிக மோசமாக வைத்துக் கொண்டதன் மூலம் இரண்டையும் பயன்படுத்த முடியாத நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறேன். எனது குடும்பத்தில் யாரும் இப்படியில்லை. ஆனால் நான் இப்படியாக இருந்தேன். இரண்டு மூன்று ஆண்டுகள் ஒரு இரு சக்கர வாகனத்தை உருப்படியாகப் பயன்படுத்தி இருந்தால் பெரிய விசயம்.

            என் அப்பா 1996 இல் வாங்கிய டி.வி.எஸ். பிப்டியை 2017 வரைப் பயன்படுத்தினார். விட்டிருந்தால் இப்போது வரை அதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார். வீட்டிலிருந்த நாங்கள்தான் அவரை மல்லுக்கட்டி டி.வி.எஸ். எக்செல் 100 க்கு மாற்றினோம். அப்போது கூட ஸ்கூட்டி வகைக்கு மாறாமல் அவர் பயன்படுத்திய மாடலை ஒத்த மாடலுக்கே மாறினார்.

            இரண்டு இரு சக்கர வாகனத்தில் விழுந்த அடி என்னை இப்போது மாற்றியிருக்கிறது. இப்போது மூன்றாவதாக வாங்கியிருக்கும் வாகனத்தைக் கொஞ்சம் கவனமாகவே பராமரிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். தினந்தோறும் காலையில் வண்டியை இயக்குவதற்கு முன் துடைத்து விடுகிறேன். அநேகமாக மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வண்டியை சேவைப்பிரிவுக்குக் கொண்டு சென்று அதை நன்முறையில் பராமரிக்கிறேன். அவர்கள் மாற்ற வேண்டியதை மாற்றி, நீக்க வேண்டியதை நீக்கி, சேர்க்க வேண்டியதை சேர்த்து ஒவ்வொரு முறையும் வண்டியைப் புதிது போலச் செய்து விடுகிறார்கள். அவர்களுக்கு எப்போதும் என் விஷேச நன்றிகள்.

            வண்டியின் பிரேக் சூவை அவ்வபோது சோதிக்க வேண்டும், அதிலுள்ள பிரேக் பேடை வண்டியின் இயக்கத்திற்குத் தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இப்போது கிடைத்த அனுபவங்கள். அதாவது வண்டியைத் தள்ளிப் பார்க்கும் போது அதன் இயக்கம் நெகிழ்வாக இருக்க வேண்டும். அதற்கேற்றாற் போல வண்டிக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து விடுங்கள் என்று வண்டியைச் சேவைக்கு விடும் போது சொல்லி விடுகிறேன். டயர்களை முக்கால்வாசி தேய்ந்தாலே மாற்றி விடுகிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் தேய்ந்த டயர்களை வைத்துச் சமாளிக்கலாம் என்றாலும் மாற்றி விடுகிறேன்.

            ஒரு முக்கியமான விசயம் சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேல் இருக்கும் டயர்களுக்குக் காற்றடித்து. அது எப்படி கனக்கச்சிதமாக அதற்குரிய காற்றழுத்தம் மாறாமல் இன்று வரை இருக்கிறது என்பது புரியவில்லை. எப்போது சோதித்தாலும் சரியான அழுத்த நிலையில் இருக்கிறது.

            வண்டியைப் பளிச்செனத் துடைக்கும் நுட்பம் எல்லாம் எனக்குப் போதாது. டீசல் போட்டுத் துடைக்கும் போது வண்டிக்கு ஒரு பளிச் கிடைக்கிறது. அதை எப்போதாவது மனதில் ஒரு குஷி பிறந்து விடும் போது மெனக்கெட்டு டீசல் வாங்கி வந்து செய்வதுண்டு. அது ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை கணக்கில் என்றாலும் அந்த ஆடி அமாவாசை கணக்குத் தவறாது.

            வண்டியில் சராசரியாக 30 கி.மீ. வேகம்தான். 35 கி.மீ. வேகத்தைத் தாண்டியதில்லை. அது எப்பேர்ப்பட்ட சாலையாக இருந்தாலும் 35 கி.மீ. வேகமே அதிகபட்ச வேகம். வண்டியின் சத்தம் இப்போது வரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. வண்டியைப் புதிதாக எடுத்த போது எடுத்த சத்தம் என்னவோ அதே சத்தம்தான் இப்போதும் காலையில் வண்டியை எடுக்கும் போதும்.

            இப்படி அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மைச் செதுக்கிக் கொண்டே போகின்றன. நீங்களும் உங்கள் இரு சக்கர வாகன அனுபவங்களைச் சொல்லுங்கள். பலருக்கும் பயன்படலாம். பயனுடையதைச் சொல்வதைப் போன்ற அறம் என்ன இருக்கிறது சொல்லுங்கள். “அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்” (குறள் 96) என்கிறார் வள்ளுவர்.

*****

Thousands of crores, billions of crores, lakhs of crores of thanks!

Thousands of crores, billions of crores, lakhs of crores of thanks!

I want to start each day with a thank you. The amazing view of the sunrise at each dawn of Thanksgiving makes me more excited.

My thanks go out to those who made yesterday sweet and those who are going to make today sweet. I would also like to express my gratitude to those who gave me trouble yesterday. This may seem like a weird thank you. But you have to become thankful for them. They are the ones who teach the great lessons of life. Thanks to the sweethearts for giving me immense love.

I wonder if there is anyone or anything in this world who deserves to be thanked. It just seems like there is no one or nothing like that to think about. Just as every object in this world has a purpose for every living thing, there is a reason to be thankful for everything.

When something is worthy of thanks I understand that just because I do not want to be thankful does not mean that something is worthless. I owe a debt of gratitude even though no one longs for my gratitude. I must always do that duty. I firmly believe that that is the inevitable primary duty of life.

The long list of thanks goes out for the sound of birds waking me up in the early morning, for the wife who comes in with a cup of tea to cheer up the day, for the family members who come in need of any help, for the plants that provided the breakfast, and for the loved ones who cooked it sweetly. Although the list goes on and on I am happy and proud to say thank you to each and every one of them.

I owe a debt of gratitude to the teachers who taught me the knowledge that led me to write this happy morning and to all those who helped me realize this happy experience. I especially want to thank you for reading this. I would like to thank you so much for your choice of having come to read this in the midst of so many assignments and if this choice had been useful to you. I kindly ask everyone to accept my thanks.

I would like to say thank you beyond that number as it is not enough to say a thousand crores, billions, trillions of crores of thanks to the legent master of tamil morals and ethics Thiruvalluvar who paved the way for us to say "Never forget Thanksgiving" and "Always forget all the evils on that day".

Yours lovingly and thanking you yours Vikatabharathi.

*****

ஆயிரம் கோடி, பல்லாயிரம் கோடி, லட்சங் கோடி நன்றிகள்!

ஆயிரம் கோடி, பல்லாயிரம் கோடி, லட்சங் கோடி நன்றிகள்!

            ஒவ்வொரு நாளின் விடியலையும் நன்றி சொல்லலோடு துவக்க விரும்புகிறேன். நன்றி சொல்லும் ஒவ்வொரு விடியலிலும் சூரிய உதயத்தின் அற்புதத் தோற்றம் என்னை அதிக உற்சாகம் கொள்ளத் தூண்டுகிறது.

            நேற்றைய நாளை இனிமையாக்கியவர்களுக்கும் கூடவே இன்றைய நாளை இனிமையாக்கப் போகிறவர்களுக்கும் என் நன்றி உரித்தாகிறது. நேற்றைய பொழுதில் சிரமங்களைக் கொடுத்தவர்களுக்கும் என் நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு வித்தியாசமான நன்றி செலுத்தலாகத் தோன்றலாம். ஆனால் அவர்களுக்கு நன்றிகளைச் செலுத்திதான் ஆக வேண்டும். வாழ்க்கையின் மகத்தான பாடங்களை அவர்கள்தான் கற்பிக்கிறார்கள். இனிமையாக்கியவர்களுக்கான நன்றியானது மகத்தான அன்பைத் தந்ததற்காக.

            இந்த உலகில் நன்றி செலுத்த தகுதியவற்றவர்களாக யாரேனும் இருக்கிறார்களா அல்லது ஏதேனும் இருக்கிறதா என்று யோசிக்கிறேன். யோசிக்க யோசிக்க அப்படி யாரும் அல்லது ஏதும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு பயன் இருப்பதைப் போலத்தான் ஒவ்வொன்றுக்கும் நன்றி செலுத்த ஒரு காரணம் இருக்கிறது.

            யாதும் நன்றி செலுத்தலுக்கு உரியவை எனும் போது நான் நன்றி செலுத்த விரும்பாமல் இருப்பதால் ஏதேனும் ஒன்று நன்றிக்குரியதன்று என்பதாகாது என்பதைப் புரிந்து கொள்கிறேன். என்னுடைய நன்றிக்காக யாரும் ஏதும் ஏங்கிக் கிடக்கவில்லை என்றாலும் நான் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். அந்தக் கடமையை நான் எப்போதும் செய்துதான் ஆக வேண்டும். வாழ்க்கையின் தவிர்க்க முடியாத முதன்மையான கடமை அதுதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

            இனிமையான அதிகாலைப் பொழுதில் என்னை எழுப்பி விட்ட பறவைகளின் ஒலிக்காக, அன்றைய பொழுதை உற்சாகமாகத் துவக்க தேநீரோடு வந்து நிற்கும் மனைவிக்காக, ஏதேனும் உதவி தேவையா என்று வந்து நிற்கும் குடும்ப உறுப்பினர்களுக்காக, காலை உணவைத் தந்த தாவரங்களுக்காக, அதை இனிமையாகச் சமைத்துத் தந்த அன்பர்களுக்காக என்று தொடர்ந்து செல்லும் நன்றிகளின் பட்டியல் மிக நீளமானது. பட்டியல் நீளமாகப் போகிறது என்றாலும் ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் தவற விடாமல் நன்றி சொல்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.

            இந்த இனிய காலைப் பொழுதில் இதை எழுதுவதற்குக் காரணமான அறிவைப் போதித்த ஆசான்களுக்கும் இந்த இனிய அனுபவத்தை உணர்வதற்குக் காரணமான அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக இதை வாசிக்கும் உங்களுக்கும் நன்றி சொல்ல பெரிதும் விரும்புகிறேன். எவ்வளவோ பணிகளுக்கு மத்தியில் இதைப் படிக்க வந்திருக்கும் உங்களின் தேர்வுக்கும் இத்தேர்வு உங்களுக்குப் பயனுடையதாக இருந்திருந்தால் அதற்கும் நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். என் நன்றிகளை ஏற்றுக் கொள்ள எல்லாரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

            “நன்றி மறப்பது நன்றன்று” என்றும் “நன்றல்லது அன்றே மறப்பது நன்று” என்று நன்றி சொல்லலுக்கு மகத்தான பாதை வகுத்துத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு ஆயிரம் கோடி, பல்லாயிரம் கோடி, பல லட்சம் கோடி நன்றிகளைத் தெரிவித்தாலும் போதாது என்பதால் நன்றிகளை அந்த எண்ணிக்கையைக் கடந்தும் சொல்ல பிரியப்படுகிறேன். என்றும் அன்புடன் என்பதோடு என்றும் நன்றியுடன் உங்கள் விகடபாரதி.

*****

14 Mar 2022

அலைவுறும் மனமும் நானும்

அலைவுறும் மனமும் நானும்

இங்கெனச் சிலவும் அங்கெனச் சிலவும்

அங்கங்கே இருக்கின்றன எனக்கானவை

எனக்கான பொருட்களைப் போல

நானும் அங்கங்கே கலந்திருக்கிறேன்

நகரத்தில் இருக்கையில் உண்டாகும் வெறுமையில்

கிராமத்தின் ஏக்கங்களும்

கிராமத்தில் தவற விட்டிருக்கும் பரபரப்புகளில்

நகரத்தின் நினைவுகளும் கலந்திருக்கின்றன

வெளி பிரதேசத்தில் இருக்கும் போது

சொந்தப் பிராந்தியத்தின் பரிதவிப்புகளும்

தாய்த் தேசத்தில் இருக்கும் போது

தூர தேசங்களின் கனவுகளும் எனக் கலந்திருந்தேன்

ஒரு நேரமும் ஓரிடத்திலும் நிலையாக இருந்திராத என்னை

நீங்கள் முழு முற்றாகப் பார்த்திருக்க முடியாது

அங்கங்கும் கொஞ்சம் கொஞ்சம் இருந்திருக்கும் நான்

இப்போதும் அப்படித்தான்

எங்கும் நிலையாகத் தங்கியிருக்க முடியாத தேசாந்திரியைப் போல

அலைந்து கொண்டிருக்க சபிக்கப்பட்டிருக்கிறோம்

என்னூடாக மனமும் மனதினூடாக நானும்

*****

13 Mar 2022

மெய் சிலிர்த்துக் கொள்ளும் வானம்

மெய் சிலிர்த்துக் கொள்ளும் வானம்

கொடும்பனி நள்ளிரவில் ஆரம்பித்து

பிற்பகல் வரை நீடிக்கிறது

இப்படியொரு நிகழ்வைப் பார்த்ததில்லை

அனுபவத்தை அலசித் தேடிக் களைத்தவர்கள் கூறுகிறார்கள்

பொழிவதும் பொழியாமல் போவதும்

வானத்தின் இயல்பு எனக் கூற யாரும் தயாராக இல்லை

நீடிக்கும் பனிப்பொழிவை இயல்புக்கு மீறியதென

புகாரளிக்கவும் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்து விடவும்

பெருங்கூட்டம் காத்து நிற்கிறது

கூட்டத்தினின்று நோக்குகையில்

வானம் கையறு நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது

கையறு நிலையிலும் புகார்களைப் பொருட்படுத்தாது

பனியைப் பொழிந்தபடி இருக்கும் வானத்தை

அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாதவர்கள்

வீட்டிற்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டு

போர்வைக்குள் புதைந்துப் போகிறார்கள்

நீடிக்கும் பனிப்பொழிவை ரசித்தபடி

பாடிக்கொண்டு செல்லும் இரவாடியின் ஒலி அலைகளில்

வானம் கொஞ்சம் மெய் சிலிர்த்துக் கொள்கிறது

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...