Showing posts with label பேய் படங்களுக்கு மவுசு. Show all posts
Showing posts with label பேய் படங்களுக்கு மவுசு. Show all posts

12 Oct 2026

ஏழைகளே இல்லை என்றால்...

எப்ஸ்டீன் கோப்பில் இந்திய அரசியல்வாதிகளின் பெயர் வந்தால் எப்படிப் பதில் சொல்வார்கள்?

அது என் பெயரே இல்லை. ஸ்பெல்லிங் மிஸ்டேக். அட்மின் எர்ரர். வெளிநாட்டு ஹேக்கர் சதி. சைபர் கிரைமில் விரைவில் புகார் கொடுப்பேன். சிபிஜ விசாரணை கோருவேன். அமெரிக்க நீதிமன்றத்துக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். இந்தியாவில் என் வளர்ச்சி பிடிக்காத அமெரிக்க டிரம்ப் இப்படிக் கோர்த்து விட்டிருக்காப்புல. மான நஷ்ட வழக்கு போட்டு பத்து லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்பேன். இப்படி எதை வேண்டுமானாலும் கூறலாம். இதற்கும் மேலாக என்னையும் ஓர் அரசியல்வாதியாக மதித்து என் பெயரை வெளியிட்டிருக்கும் எப்ஸ்டீன் கோப்புகளுக்கு இந்திய மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூட கூறலாம். யார் கண்டது? பெயர்கள் வந்தால்தான் என்னென்ன கூத்துகள் நடக்கும் என்பது தெரியும். எப்போதும் கற்பனையை விட உண்மை பயங்கரமானது அல்லவா!

*****

தங்கம், வெள்ளி விலைகளை ஏற்றியாயிற்று. அடுத்து எதனெதன் விலைகளை ஏற்றலாம்?

பழைய இரும்பு, ஈயம், பித்தளை எல்லாம் எதற்கு இருக்கின்றன. வரிசையாக ஏற்றித் தள்ள வேண்டியதுதான். அட போங்கடா நீங்களும் உங்கள் முதலீட்டு உலகமும் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க இங்கு டாஸ்மாக் இருக்க, அதை மட்டும் விலையேற்றாமல் இருந்தால் போதும் நம் குடிமக்களுக்கு, வேறு எதை வேண்டுமானாலும விலை ஏற்றிக் கொண்டே போகலாம்.

*****

நாட்டில் ஏழைகளே இல்லாமல் செய்து விட்டால் என்ன நடக்கும்?

ஐநூறு ரூபாய் பணமும், பிரியாணி பொட்டலமும் கொடுத்துக் கூப்பிட்டு வர அரசியல்வாதிகளுக்கு ஆட்களே கிடைக்க மாட்டார்கள். அதனால் அரசியல்வாதிகள் ஏழைகளை ஒழிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள், வளர்ப்பதில்தான் ஆர்வம் காட்டுவார்கள்.

*****

ஆயுசு நூறு என்று இனி யாரையாவது வாழ்த்த முடியுமா?

இவ்வளவு டாஸ்மாக் கடைகளை வைத்துக் கொண்டு அப்படியெல்லாம் எப்படி வாழ்த்த முடியும்? வேண்டுமானால் அந்தக் கடைகளை ஆயுசு நூறு என்று என்ன, ஆயுசு ஆயிரம் என்றே வாழ்த்தலாம்.

*****

திடீரெனப் பேய் படங்களுக்கு மவுசு கூடி விடுவதன் காரணமென்ன?

மனுஷ நடிப்பையே பார்த்து அலுத்துப் போய் விடுவதுதான். எந்த நினைப்பில் எப்படிச் செத்துப் பேயானார்களோ என்றில்லாமல், அவர்களுக்கும் இப்படி ஒரு ஸ்டார் அந்தஸ்து கிடைத்து விடுகிறதல்லவா!

*****