Showing posts with label மண்வாசம். Show all posts
Showing posts with label மண்வாசம். Show all posts

18 Aug 2026

பதுங்கிக் கிடக்கும் மண்வாசம்

பதுங்கிக் கிடக்கும் மண்வாசம்

வியர்வை வாடை ஒட்டாத

மின்விசிறி சுழலும்

குளிரூட்டப்பட்ட

தெர்மாஸ் பிளாஸ்க் அறையில்

கண்ணாடி சன்னலைச் சற்றே திறக்க

ஹைட்ரோ கார்பனின் டீசல் வாசனை

சட்டென்று எட்டிப் பார்க்க

அதை நறுமணமூட்டியின் வாசனையில்

முக்கி மூழ்கடித்து வைத்திட

வெளியே தகித்துக் கொண்டிருக்கும் பூமியின்

பிம்பங்களின் அகதிகள் போல் மனிதர்கள் இருக்க

கோடைமழை பொழியும் இந்நாளில்

டைல்ஸ் பதித்த தரைக்கடியில்

பதுங்கிக் கிடக்கிறது

மண்வாசம்

*****