Showing posts with label இருத்தல். Show all posts
Showing posts with label இருத்தல். Show all posts

4 Oct 2026

இருத்தல்

இருத்தல்

அத்தனை துளிகளால் நிறைந்திருந்தாலும்

கடலுக்கும் இருக்கிறது

ஒரு துளி தாகம்

வண்ணங்களால் நிரம்பியிருந்தாலும்

வானவில்லுக்கும் இருக்கிறது

வண்ணம் மீதான ஏக்கம்

அத்தனையும் சொல்லி முடித்த பிறகும்

புத்தரின் மௌனத்தில் எஞ்சி

உறைந்து நிற்கிறது ஒரு சொல்

எத்தனை நிறைத்தாலும்

நிரம்பாத இந்த வாழ்வில்

அரிசியும் சீனியும்

பொங்கலுக்குப் பரிசும்

கிடைக்கையில்

தேவதைகளுக்கும்

ஓர் ஆசை இருக்கத்தான் செய்கிறது

ஒரு குடும்ப அட்டை இருந்திருக்கலாம் என்று.

*****