Showing posts with label Tell a story to the pillow!. Show all posts
Showing posts with label Tell a story to the pillow!. Show all posts

31 May 2025

தலையணையிடம் கதை சொல்லுங்கள்!

தலையணையிடம் கதை சொல்லுங்கள்!

செய்ய நினைக்கும் போது செய்ய முடியாது

நின்று கொண்டே தூங்க வேண்டியிருக்கும்

இயலாமை பாடாய்ப் படுத்தும்

கவலைகள் மனதை அரித்துக் கொண்டிருக்கும்

ஒரு பாதி அங்கீகரிக்கப்படலாம்

மறுபாதியில் அசிங்கப்படுத்தப்படுத்தப்படலாம்

இரட்டிப்பு வேலையில் அலைக்கழிக்கப்படலாம்

மன அமைதி நூலறுந்த பட்டமாகலாம்

உட்கார்ந்து யோசித்தால் எந்தப் பிரச்சனையும் நினைவில் நிற்காது

சரிதான் போ நல்லதென்று நினைத்தால்

ஒவ்வொரு பிரச்சனையாக நினைவுக்கு வரும்

தூக்கில் தொங்கி விடக் கூட நினைக்கலாம்

அப்படி ஒரு நினைப்பு வரும் போது

கட்டிப் பிடிக்க யாராவது இருந்தால் நல்லது

இல்லாது போனாலும் தலையணையைக் கட்டிக் கொள்ளுங்கள்

அதனிடம் ஒரு கதையைச் சொல்லுங்கள்

உங்கள் பாரம் தலையணைக்குள் இறங்கியிருக்கும்

அதை இனி தலைக்கு வைத்துப் படுக்காமல்

பக்கத்தில் வைத்துப் படுங்கள்

ஒவ்வோர் இரவிலும் உங்கள் தலையணை நண்பரிடம்

உங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வாருங்கள்

உங்கள் கதை வளர்ந்து கொண்டிருக்கும்

உங்கள் தூக்குக் கயிறு காணாமல் போயிருக்கும்

*****