Showing posts with label Act of life. Show all posts
Showing posts with label Act of life. Show all posts

27 May 2025

கிளி பச்சைக் கூண்டு

நடிப்பெனப்படுவது…

நடிப்பெனப்படுவது யாதெனில்

நடிப்பது

நடிப்பு வராமலிருப்பதும் ஒரு நடிப்பு

நடிப்பு வருவதும் ஒரு நடிப்பு

சுமாராக நடிப்பதும் ஒரு நடிப்பு

ஜோராக நடிப்பதும் ஒரு நடிப்பு

நடிப்பென்பது எது

நடிப்பில்லை என்பது எது

கோலிவுட்டில்

சுமாரெனச் சொல்லப்பட்டவர்

பாலிவுட்டில்

கலக்கிக் கொண்டிருந்தார்

*****

கூண்டு

எத்தனை பச்சை

எவ்வளவு சிவப்பு

என்னே அழகு

பச்சை சிவப்பை மிஞ்சும்

பஞ்சவர்ணமும் உண்டென

எவ்வளவுதான் வியந்தாலும்

அடைபட்டு விட்டால்

கூண்டுதான் கிளிக்கு

*****