பண்பாடு
"தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்கிறதுதான் பாஸ் நம்மோட
பண்பாடு!" ஊற்றிக் கொடுத்தான் குடித்துப் பழக்கமில்லாத
குருசாமிக்கு, மொடாக் குடியனான முத்துசாமி.
*****
அடிக்காதே!
"கோபப்பட்டு யாரையும் அடிக்கக் கூடாது! புரியுதா?" என்று மகள் கனிகாவை அடித்துக் கொண்டிருந்தார்
சித்தார்த்.
*****
தூக்கு
தொலைக்காட்சியில் ரியல் எஸ்டேட் விளம்பரம் ஓடிக் கொண்டிருக்க, சுழன்று கொண்டிருந்த மின்விசிறியை நிறுத்தி விட்டு,
தூக்குப் போட்டுக் கொண்டார் விவசாயி அப்பாவு.
*****
No comments:
Post a Comment