அடையாளம்
கழுத்தில்
தொங்கிய
அடையாள
அட்டையை
அறுத்து
வீசிய போது
ஆசுவாசமாக
இருந்தது
அன்றிலிருந்து
அடையாள
அட்டை
அணிவதை
நிறுத்தி
துறவியாகிப்
போனவர்
அடையாளத்திற்காக
அணிந்து
கொண்டார்
அந்த
நிறத்தை
*****
யாருமறியா பராபரமே!
மேய்ச்சலுக்குப்
போன சாலையில்
டாடா
ஏஸின் மீதேறி
அடி
மாடாகப் போவோம் என்பது
அந்த
மாட்டிற்கும் தெரியாது
அந்த
மாடு போன பிறகு
மாட்டுப்பால்
என்று
பாக்கெட்டில்
வரப் போகும்
ரசாயனப்
பாலைப் பருகப் போகிறோம்
என்பது
மனிதர்களுக்கும்
தெரியாது
எல்லாம்
கடக்கும் சாலைக்கும் தெரியாது
விபத்துகளில்
சிந்தும் ரத்தம்
எந்த
ரசாயனத்தின்
எத்தனை
அணு எண் நிறை எண் கொண்ட துளியென்று
*****
