Showing posts with label The story of a story. Show all posts
Showing posts with label The story of a story. Show all posts

6 May 2025

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள்

எது ஒரு கதை என்பதற்கு

ஒவ்வொருவருக்கும்

ஒவ்வொரு கோணம் இருக்கிறது

கோணத்தை அளந்து கொண்டிருந்தால்

கதை சொல்ல முடியாது

கதை சொல்ல வேண்டிய

நிர்பந்தம் ஏற்பட்டு விடும் போது

சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது

ஒரு கொலைகாரர்

குற்றவாளிக் கூண்டில் கதை சொல்கிறார்

தர்மசங்கடத்தில் நிலைகுழைந்து போயிருப்பவர்

தன்னிலையை விளக்க கதை சொல்கிறார்

கூனிக் குறுகி நிற்பவர்

குற்றவுணர்வைப் போக்கிக் கொள்ள கதை சொல்கிறார்

இயலாமையால் நெளிபவர்

இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று கதை அளக்கிறார்

தோல்வியில் மேற்கொண்டு துவள முடியாவர்

கழிவிரக்கம் கண்டு கதை சொல்கிறார்

கதை சொல்லி விடும் போது

தீவிரம் இறங்கி விடுகிறது

அது தீவிர கதையா

சோதா கதையா என்பது வேறு விசயம்

*****