Showing posts with label கூந்தல் ரகசியம். Show all posts
Showing posts with label கூந்தல் ரகசியம். Show all posts

1 Dec 2024

நெடுங்கூந்தலின் ரகசியம்

நெடுங்கூந்தலின் ரகசியம்

நீண்ட கூந்தல் கொண்ட பெண்ணிடம் விசாரிக்கிறேன்

முடிக்காக என்ன செய்கிறீர்கள்

என்ன ஷாம்பூவைப் பயன்படுத்துகிறீர்கள்

என்ன எண்ணெய் தேய்க்கிறீர்கள்

நெடுங்கூந்தலுக்கான உணவு ரகசியம் யாது

ஏதேனும் மூலிகைகள் பயன்படுத்துகிறீர்களா

நீண்ட கூந்தலுக்கான ஆலோசனைகளைச் சொல்லுங்கள்

அவர் விக்கித்து நிற்கிறார்

எதுவும் செய்யாமல் நீண்டு நெடிதாக இருக்கும்

கூந்தலுக்கு எந்த நுட்பங்களையும் பயன்படுத்தவில்லை

என்பதை எப்படிச் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறார்

எனக்குத் தெரியவில்லை என்றவர் கேட்கிறார்

காட்டை வளர்க்க விதை போட்ட

கானக மனிதர் யாராக இருக்க முடியும்

*****