30 Nov 2021

Blood soaking the wall

Blood soaking the wall

The letters give a sense of guilt

Criticize the life lived so far

Define how to live

The practical contradictions are not visible to the letters

After the letters are born

The letters forget what was born out of practical

Thought about make feeling emotionally

Consider that stopping at the peak of amazement is enough

About the contamination of human trafficking of business

The letters don’t care

All the possibilities for survival

Letters who do well

The reader may find it impossible

A moment frozen

Letters interpret as misguiding

Stating the reason of written report

The copy is original and the original is a forgery

Make power threats

When the letters are confronted by the letters

The historical wall is soaked with human blood

No longer is it written to write the truth

Letters are trampled by underfoot wearing boots

*****

சுவரை நனைக்கும் குருதி

சுவரை நனைக்கும் குருதி

எழுத்துகள் குற்ற உணர்வைத் தருகின்றன

இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைக் குறை கூறுகின்றன

எப்படி வாழ வேண்டும் என வரையறுக்கின்றன

நடைமுறை முரண்பாடுகள் எழுத்துகளுக்குத் தெரிவதில்லை

எழுத்துகள் பிறந்த பிறகு

நடைமுறையினின்றுப் பிறந்ததை எழுத்துகள் மறந்து விடுகின்றன

உணர்ச்சிவசப்படுத்தினால் போதும் என்று நினைக்கின்றன

வியப்பின் உச்சத்தில் நிறுத்துவது போதும் என்று கருதுகின்றன

மனித வியாபாரத்தின் மலினப் பொருளாவதைப் பற்றி

எழுத்துகள் அக்கறை காட்டுவதில்லை

பிழைத்திருப்பதற்கான அத்தனை சாத்தியங்களையும்

செய்து கொள்ளும் எழுத்துகள்

வாசிப்போருக்கு அச்சாத்தியம் கூடாதென்கின்றன

உறைந்து விட்ட ஒரு பொழுதைத்

தவறாகப் பிரதியெடுக்கும் எழுத்துகள்

பதிவாகி விட்ட காரணத்தைச் சொல்லி

நகலை அசலென்றும் அசலை போலியென்றும்

அதிகார மிரட்டல் செய்கின்றன

எழுத்துகளை எழுத்துகளால் எதிர்கொள்கையில்

வரலாற்றுச் சுவரை மனித குருதி நனைக்கிறது

இனிமேலாவது உண்மையை எழுதுங்கள் என்று எழுதப்படுவது

பூட்ஸ் கால்களின் அடியில் மிதிபடுகிறது

*****

29 Nov 2021

Who am I and who are you

Who am I and who are you

Whiles meet each time

Asks to find who I am

Like finding a lost object

Not easy though

I say you are me I am you

How can I be you and how can you be I

He says I am always I am and you always you are

If you remove each part

When he asks if the object is there

If you add with each part

I say the material will develop there

Talk about achieving emptiness, he says

I say what is wrong with speaking of existence

In conclusion he says whether you want wisdom or not

I say keep your goods to yourself

It can’t give or receive as goods, he says

Otherwise how you sell that, I say

He yells, "Stop looking as objects at anything."

I have no problem with who I am

I'm afraid of who you are

The child of Satan runs away from here, He says

One day everyone will be called children of God

I'm telling you a lie

As if the question of who I am has become meaningless

As he began to look at the rest

I smile as if I understand who you are

*****

யாராகிய நானும் யாராகிய நீயும்

யாராகிய நானும் யாராகிய நீயும்

ஒவ்வொரு முறைச் சந்திக்கும் போதும்

நான் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டாயா என்கிறார்

தொலைந்து விட்ட பொருளைக் கண்டுபிடிப்பது போல

சாமானியமாக இல்லை என்ற போதும்

நான்தான் நீ நீதான் நான் என்கிறேன் நான்

நானெப்படி நீயாக முடியும் நீயெப்படி நானாக முடியும்

நான் நான்தான் நீ நீதான் என்கிறார் அவர்

ஒவ்வொரு பாகமாய்க் கழித்துக் கொண்டு போனால்

பொருள் அங்கிருக்குமா என்று அவர் வினவுகையில்

ஒவ்வோரு பாகமாய்ச் சேர்த்துக் கொண்டு போனால்

பொருள் அங்கு உருவாகி விடும் என்கிறேன் நான்

சூன்யத்தை அடைவதைப் பற்றிப் பேசு என்கிறார் அவர்

இருப்பைப் பேசுவதில் தவறென்ன என்கிறேன் நான்

உனக்கு ஞானம் வேண்டுமா வேண்டாமா என்கிறார் முடிவாக அவர்

உங்கள் சரக்கை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறேன் நான்

அது சரக்கல்ல கொடுக்கவோ பெறவோ முடியாது என்கிறார் அவர்

பிறகெப்படி உங்களால் விற்பனை செய்ய முடிகிறது என்றதும்

எதையும் பண்டமாய்ப் பார்ப்பதை நிறுத்து என்று சத்தமிடுகிறார்

நான் யார் என்பது குறித்து எனக்கு எந்த பிரச்சனையுமில்லை

நீங்கள் யார் என்பது குறித்துதான் அச்சமாய் இருக்கிறது என்கிறேன் நான்

சாத்தானின் குழந்தையே இங்கிருந்து ஓடி விடு என்கிறார் ஓலமிட்டபடி

அன்றொரு நாள் எல்லாரும் கடவுளின் குழந்தைகள் என்று

நீங்கள் சொன்னது பொய்யா என்கிறேன் நான்

நான் யார் என்ற கேள்வி அர்த்தமிழந்து விட்டதைப் போல

அவர் விச்ராந்தியாய்ப் பார்க்கத் தொடங்குகையில்

நீங்கள் யார் என்பது புரிந்து விட்டது போலப் புன்னகைக்கிறேன் நான்

*****

28 Nov 2021

Waiting for a day

Waiting for a day

Noisy merchants have dwindled

In high decibel sound of salt merchants

In heavy vibration noise of fish merchants

In the same sense sound of tamarind merchants

In the deep and loud sound of lettuce merchants

The listening hearing voices are stopped

In order to make the required amount of sound

Equipped with recorded voices

Those who come in vehicles speak in a thin voice

Before starting the deal

They say the same price

Even if you can’t miss the object that came in front of the door

Inadequate cash on hand

Merchants coming in loud

She starts to wait for someone to come

Keep the head load down

Water for thirst or

As a mouthful of tea for the hungry stomach

Give the existing money for the visit of those who say mother

She waits all day and goes betrayed

*****

ஒரு நாளின் காத்திருப்பு

ஒரு நாளின் காத்திருப்பு

சத்தமெழுப்பி வரும் வியாபாரிகள் குறைந்து விட்டார்கள்

உப்பே உப்பே என்று ஏகாரத்திலோ

மீனூ மீனூ என்று ஊகாரத்திலோ

புளீ புளீ என்று ஈகாரத்திலோ

கீரை கீரை என்று ஐகாரத்திலோ

கேட்கும் குரல்கள் நின்று விட்டன

தேவையான அளவு ஒலியெழுப்பும் வகையில்

பதிவு செய்யப்பட்ட குரல்கள் பொருத்தப்பட்ட

வாகனங்களில் வருபவர்கள் சன்னமான குரலில் பேசுகிறார்கள்

பேரத்தைத் துவக்குவதற்கு முன்னே

ஒரே விலைதான் என்று அடித்துப் பேசுகிறார்கள்

வாசல் முன் வந்தப் பொருளைத் தவற விட முடியாமலும்

கையிலிருக்கும் பணம் போதாமையாலும் ஒருத்தி

சத்தமெழுப்பியபடி வரும் வியாபாரிகள்

யாரேனும் வருவார்களா எனக் காத்திருக்க தொடங்குகிறாள்

தலைச்சுமையைப் பாந்தமாய் இறக்கி வைத்து

தாகத்துக்குத் தண்ணீரோ அல்லது

பசிக்கு வயிறுக்கு ஒரு வாய் டீயோ கேட்டபடி

இருக்குற காசைக் கொடு தாயீ என்று சொல்வோரின் வருகைக்காக

நாள் முழுவதும் காத்திருந்து ஏமாந்துப் போகிறாள்

*****

27 Nov 2021

Moments that crossing fever

Moments that crossing fever

They say the temperature of the body is high

The body inside me is cold

It’s like shivering in the snow land

In the inadequacies of blankets

All of the cloths available

The whole body is surrounded

They say no to yoghurt

They are delicious to the tongue

Sweet jellies on the bile tongue

Like a neem or like a bitter melon

Brings territory of unbearable bitterness

Some say some days don’t take bath

Bathing is as comforting as motherhood

They say everything is fine with a little sweat

The water of the body disappears like desert water

That there is comfort in unbearable physical pain

They say it is better to take it to the doctor to tell

Stir in the garlic and pepper

The smell of juice fills the house

Counseling does not stop until the fever stops

If the comfort of the bed is understood on the day of the fever

They start sobbing that I'm starting to fall asleep and chatter

The sound of the vehicle taking me to the hospital

Begins to hear like the Doppler effect of sound

*****

காய்ச்சலில் கரையும் பொழுதுகள்

காய்ச்சலில் கரையும் பொழுதுகள்

உடல் காய்கிறது என்கிறார்கள்

எனக்கோ உள்ளுக்குள் உடல் குளிர்கிறது

பனிக்காட்டில் வெடவெடப்பது போல இருக்கிறது

போர்வைகளின் போதாமைகளில்

கிடைக்கும் துணிகள் அனைத்தும்

உடல் முழுதும் சுற்றிச் சூழ்ந்திருக்கின்றன

மோரும் தயிரும் வேண்டாம் என்கிறார்கள்

அவையன்றோ நாவுக்குச் சுவையாய் இருக்கின்றன

இனிக்கும் ஜிலேபி பித்தமேறிய நாக்கில்

பாகலைப் போலவே வேம்பைப் போலவோ

தாங்க முடியாத கசப்பின் பிரதேசத்தைக் கொணர்கிறது

சில நாள் குளியல் வேண்டாம் என்கிறார்கள்

குளியல் அன்றோ தாய்மடி போல ஆறுதல் தருகிறது

கொஞ்சம் வியர்த்தால் எல்லாம் சரியாகும் என்கிறார்கள்

உடலின் நீர் பாலைவனத் தண்ணீரைப் போல மறைந்து கிடக்கின்றது

தாங்க முடியாத உடல் வலியில் சுகம் இருப்பதாக

சொல்லப் போக மருத்துவரிடம் கொண்டு செல்வது நல்லது என்கிறார்கள்

அதற்குள் பூண்டையும் மிளகையும் பொடித்த

ரசத்தின் வாசனை வீடெங்கும் நிறைகிறது

காய்ச்சல் நிற்கும் வரை ஆலோசனைகள் நிற்காமல் பெருக்கெடுக்கின்றன

படுக்கையின் சுகம் காய்ச்சலில் அன்றோ புரிபடுகிறது என்றால்

உளறத் தொடங்கி விட்டான் என்று உஷாராகத் தொடங்குகிறார்கள்

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வாகனம் வரும் ஓசை

ஒலியின் டாப்ளர் விளைவைப் போலக் கேட்கத் தொடங்குகிறது

*****

26 Nov 2021

One thousand mosquitoes per rain

One thousand mosquitoes per rain

Normal rains cause mosquitoes to breed here. Let's call them ordinary mosquitoes. Needless to say heavy rain, they are heavy mosquitoes. You have to see keenly every mosquito. They look like genetically modified giant mosquitoes.

There are mosquitoes that bite in the morning, mosquitoes that bite in the afternoon, mosquitoes that bite in the evening, and mosquitoes that bite at night. If you ask medical science, they will say malaria mosquito, dengue mosquito, chickungunya mosquito, filariasis mosquito and many more.

If the rainy season starts, you can hear the announcement all over Tamil Nadu that do not let water stagnate around the house and remove old items that do not stagnate. Then if the rain gets a little heavy you have to pump out the stagnant water around the house and the roads with giant motors. The water that surrounds the house at times can also cause the situation of having to leave the house in boats. If so, it's a celebration for mosquitoes. Mosquitoes breed indiscriminately as a result of that celebration.

Poverty alleviation in India is talked about as a big issue. In fact, getting rid of mosquitoes should be the big task. Mosquitoes also play a major role in all-India problems. Looking at the mosquitoes that are spread here, it seems as if they have been planned, researched and bred.

Mosquitoes have the good fortune to roam free without fear of being bitten by humans. Humans, which chase away all insects, are afraid of only one mosquito and enter the mosquito net.

No one seems to care much about mosquito control in India as buying or keeping mosquito nets, mosquito repellents or setting up mosquito nets around the house is a convenience in India. They hope to increase it in the rainy season and decrease it in the summer.

But mosquito breeding can be controlled by keeping the environment and water levels hygienic. What to do has become something that our people do not like. They still think it is the duty of the panchayat, municipality, corporation and government. It is with this in mind that our people have made the situation of creating mosquito everywhere.

*****

ஒரு மழைக்கு ஓராயிரம் கொசுக்கள்

ஒரு மழைக்கு ஓராயிரம் கொசுக்கள்

            சாதாரண மழைக்கே இங்கு கொசுக்குள் பெருகி விடும். அவற்றைச் சாதாரண கொசுக்கள் என்று சொல்லாம். கனமழைக்குச் சொல்லவே வேண்டியதில்லை. அவை கனமான கொசுக்கள். நீங்கள் ஒவ்வொரு கொசுக்களையும் பார்க்க வேண்டுமே. மரபணு மாற்றம் செய்யப்பட்ட வீரியமான ராட்சச கொசுக்களைப் போல இருக்கும்.

            காலையில் கடிக்கும் கொசுக்கள், மதியத்தில் கடிக்கும் கொசுக்கள், மாலையில் கடிக்கும் கொசுக்கள், இரவில் கடிக்கும் கொசுக்கள் என்று பலவிதமான கொசுக்கள் இங்கு இருக்கின்றன. மருத்துவ விஞ்ஞானத்தைக் கேட்டால் மலேரியா கொசு, டெங்கு கொசு, சிக்கன் குன்யா கொசு, யானைக்கால் கொசு என்று பலவற்றைச் சொல்வார்கள்.

            மழைக்காலம் தொடங்கி விட்டால் வீட்டைச் சுற்றி தண்ணீரைத் தேங்க விடாதீர், தண்ணீர் தேங்காதவறு பழையப் பொருட்களை அகற்றுங்கள் என்ற அறிவிப்பைத் தமிழகமெங்கும் கேட்கலாம். பிறகு மழைக் கொஞ்சம் தீவிரமானால் வீட்டைச் சுற்றிலும் சாலைகள்தோறும் தேங்கி நிற்கும் நீரை நீங்கள் ராட்சச மோட்டர்களை வைத்துதான் உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். சமயத்தில் வீட்டைச் சுற்றி நிற்கும் தண்ணீரால் வீட்டை விட்டு படகுகளில் வெளியேற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இப்படியெல்லாம் இருந்தால் அது கொசுக்களுக்குக் கொண்டாட்டம்தானே. அந்தக் கொண்டாட்டத்தின் விளைவாகக் கொசுக்கள் வகைதொகையில்லாமல் பெருகுகின்றன.

            இந்தியாவில் வறுமையை ஒழிப்பது ஒரு பெரிய விசயமாகப் பேசப்படுகிறது. உண்மையில் கொசுக்களை ஒழிப்பதுதான் பெரிய விசயமாகப் பேசப்பட வேண்டும். அகில இந்திய பிரச்சனைகளிலும் கொசுக்கள் முதன்மையான இடத்தைப் பெறும். இங்குப் பரவியிருக்கும் கொசுக்களைப் பார்க்கையில் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்து வளர்த்துப் பெருக்கி இருக்கிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றும்.

            மனிதரைக் கடித்து விட்டு பயமில்லாமல் திரியும் அதிர்ஷ்டம் கொசுக்களுக்குத்தான் வாய்த்திருக்கிறது. எல்லா பூச்சிகளையும் அடித்துத் துரத்தும் மனிதர்கள் கொசு ஒன்றிற்கு மட்டும்தான் பயந்து கொசுவலைக்குள் புகுந்து கொள்கிறார்கள்.

            கொசுவர்த்திச் சுருள் வாங்கி வைத்துக் கொள்வதோ, கொசுவை விரட்டும் கொசுவிரட்டிகளை வாங்கி வைத்துக் கொள்வதோ, வீட்டைச் சுற்றி கொசுவலையை அமைத்துக் கொள்வதோ இந்தியாவில் அவரவர் வசதியைப் பொருத்த விசயங்கள் என்பதால் கொசுவைக் கட்டுப்படுத்துவது குறித்து யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரிவதில்லை. மழைக்காலங்களில் அதுவாகப் பெருகிக் கொள்ளும், கோடைக்காலங்களில் அதுவாக குறைந்து கொள்ளும் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

            ஆனால் கொஞ்சம் சுகாதாரமாகச் சுற்றுப்புறங்களையும் நீர் நிலைகளையும் பேணினால் கொசுக்களின் பெருக்கம் கட்டுபாட்டோடுதான் இருக்கும். என்ன செய்வது பேணுதல் என்பது நம் மக்களுக்குப் பிடிக்காத ஒன்றாக ஆகி விட்டது. அதையெல்லாம் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசாங்கத்தின் கடமை என்றே இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நினைப்பினாலேயே எங்கெங்கும் கொசுக்களை நீக்கமற நிறைந்திருக்க செய்திருக்கிறார்கள் நம் மக்கள்.

*****

25 Nov 2021

The assets of the nation of God

The assets of the nation of God

It is often surprising and sometimes shocking to see people presenting gold, silver and coins in temples.

You can take the Padmanabha Swamy Temple in Kerala. It took several days to evaluate its gold jewelry. You could argue that they are the traditional property of the temple. They are unlikely to have come to the temple without anyone giving. Tirupati Perumal is said to be the richest god of the world. He can be described as the superstar of the gods in the collection hunt.

Does God make people aware of their grievances or not? Everyone rushes to the temple to express their grievances. Then they make a covenant with God to atone for their sins. Without breaking the agreement, they present their offering by gold, silver, or cash and pay off their prayer.

You may notice the word offering which is more related to financial systems. Major financial institutions, including banks, develop themselves with interest on loans. Thus God also develops his temple through such offerings.

If God created all human beings he should not have created human beings with discriminatory flaws. If there are such things in God's creation then they can never be considered as God's creation.

You can’t see flawless human beings. These flaws can take on different forms depending on the human mind. Most people try to get rid of all these flaws by focusing on God.

All the ornaments that God wears are made up of prayers that result from the manifestation of those flaws that people lack. Thus God multiplies the wealth of his temple by resolving the grievances of the people.

This cannot be done by all gods. You can also see that one of the temples of the same name is flourishing and there is no way to spend on another temple. There are emotional things that people do in this too. Only God who is believed to fulfill it gets income and fame.

God uses and manages the weakness of the fundamental flaws in people. The administration of God's grace becomes more complicated when people have the impression that there are no flaws in their minds. But the piggy banks the nations of the gods are always full of color because the human mind is in the throes of counting the faults.

*****

கடவுள் தேசத்தின் சொத்துகள்

கடவுள் தேசத்தின் சொத்துகள்

            மக்கள் கோயில்களில் தங்கம், வெள்ளி, காசு என்று குவிப்பதைப் பார்க்கும் போது பல சமயங்களில் ஆச்சரியமாகவும் சில சமயங்களில் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

            கேரளாவின் பத்மநாப சுவாமி கோயிலை நீங்கள் எடுத்தக் கொள்ளலாம். அதன் தங்க நகைகளை மதிப்பிட பல நாட்கள் தேவைப்பட்டன. அவை கோயிலின் பாரம்பரியமான சொத்துகள் என்று நீங்கள் வாதிடலாம். யாரும் கொடுக்காமல் கோயிலுக்கு அவை வந்திருக்க வாய்ப்பில்லை. திருப்பதி பெருமாளை உலகின் பணக்காரக் கடவுளாகத்தான் குறிப்பிடுகிறார்கள். வசூல் வேட்டையில் கடவுள்களின் சூப்பர் ஸ்டார் என்று அவரைத்தான் குறிப்பிடலாம்.

            கடவுள் மக்களுக்குக் குறைகளைத் தெரிந்து வைக்கிறாரோ, தெரியாமல் வைக்கிறாரோ? ஒவ்வொருவரும் தங்கள் குறைகளைச் சொல்லத்தான் கோயிலை நோக்கிப் படையெடுக்கிறார்கள். பிறகு தங்கள் குறைகளைப் போக்குவதற்குக் கடவுளோடு ஒரு உடன்படிக்கையைச் செய்து கொள்கிறார்கள். அந்த உடன்படிக்கைப் பிசகாமல் தங்கமோ, வெள்ளியோ, பணமோ வேண்டிக்கொண்டபடி நேர்த்திக்கடனைச் செலுத்தி விடுகிறார்கள்.

            நேர்த்திக்கடன் என்ற வார்த்தையில் இருக்கும் கடன் என்ற சொல்லை நீங்கள் கவனிக்கலாம். வங்கிகள் உள்ளிட்ட பெரும் பொருளாதார நிறுவனங்கள் கொடுக்கும் கடனுக்கான வட்டியை வைத்தே தங்களை விருத்திச் செய்கின்றன. அப்படி கடவுளும் நேர்த்திக்கடன் மூலமாகத் தன்னுடைய கோயிலை விருத்தி செய்கிறார்.

            கடவுள்தான் மனிதர்களையெல்லாம் படைத்தார் என்றால் அவர் மனிதர்களைப் பாரபட்சமாகக் குறைகளோடு படைத்திருக்கக் கூடாது. கடவுள் படைப்பில் அப்படி சில விசயங்கள் இருக்கும் என்றால் அவற்றைக் கடவுள் படைப்பாகக் கொள்ளவே முடியாது.

            குறையில்லாத மனிதர்களை நீங்கள் பார்க்க முடியாது. மனிதர்களின் மனதைப் பொருத்து இந்தக் குறைகள் பல்வேறு விதமாக விஸ்வரூபம் எடுக்கக் கூடியவை. இந்தக் குறைகளை எல்லாம் கடவுளை மையமாக வைத்தே பெரும்பாலான மக்கள் போக்கிக் கொள்ள முயல்கிறார்கள்.

            கடவுள் அணிந்து இருக்கும் ஆபரணங்கள் எல்லாம் மக்களிடம் எது இல்லாமல் இருக்கிறதோ அந்தக் குறைகளின் வெளிப்பாடுகளால் விளைந்த வேண்டுதல்களால் உண்டானவை. இப்படி மக்களின் குறைகளைத் தீர்த்து வைத்து கடவுள் தனது கோயிலுக்கான சொத்துகளைப் பெருக்கிக் கொள்கிறார்.

            இப்படி எல்லா கடவுள்களாலும் செய்து விட முடியாது. ஒரே பெயருள்ள கடவுள் கோயில்களில் ஒரு கோயில் செழிப்போடும் மற்றொரு கோயில் செலவுக்கே வழியில்லாமல் இருப்பதையும் நீங்கள் பார்க்கலாம். இதிலும் மக்களுக்கு என்று உணர்வு ரீதியான விசயங்கள் இருக்கின்றன. அதைப் பூர்த்தி செய்வதாக நம்பப்படும் கடவுளுக்கே வருமானங்களும் பிரபலத் தன்மையும் கிடைக்கிறது.

            மக்களிடம் உள்ள அடிப்படையான குறைகள் குறித்த பலவீனத்தைத்தான் கடவுள் பயன்படுத்துகிறார். மக்கள் மனதில் குறைகள் எதுவும் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டால் கடவுளின் அருள் பரிபாலனைகள் மிகவும் சிக்கலாகி விடும். ஆனால் மனித மனம் குறைகளை எண்ணி எண்ணி குமையும் வகையில் இருப்பதால் கடவுளர்களின் தேசங்களின் உண்டியல்கள் எப்போதும் நிரம்பிய வண்ணமாக உள்ளன.

*****

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! இன்றைக்கு எல்லாவற்றிற்குமான வாய்ப்புகள் வந்து விட்டன. வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்துவதா பெரிது? அதற்கான ...