Showing posts with label நோயாளியின் வாக்குமூலம். Show all posts
Showing posts with label நோயாளியின் வாக்குமூலம். Show all posts

17 Dec 2024

நோயாளியின் வாக்குமூலம்

நோயாளியின் வாக்குமூலம்

நான் நோயாளியாகத்தான் இருந்தேன்

மருந்துகளைத் தின்று தின்று

மருத்துவர்களைப் பார்த்து பார்த்து

இன்று நான் ஒரு மருத்துவராய் நிமிர்ந்து நிற்கிறேன்

அலோபதி சரியா

ஓமியோபதி சரியா

சித்த மருத்துவம் சரியா

ஆயுர்வேதம் சரியா

இயற்கை மருத்துவம் சரியா

எது சரி என்பது எனக்கு முக்கியமில்லை

எது தவறு என்பதும் எனக்கு முக்கியமில்லை

எந்த நோய்க்கு எந்த மருத்துவம் சரி என்பது

எனக்குத் தெரியும்

ஏனென்றால் நான் நோயாளியாக இருந்தேன்

இப்போதும் இருக்கிறேன்

ஒவ்வொரு நோய்க்கும் எந்த மருத்துவம் சரியாக வரும்

என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே

எப்போதும் நோயாளியாக இருப்பேன்

ஒவ்வொரு மருத்துவத்தின் சோதனை எலியாக

சந்தோசமாக நான் இருப்பேன்

*****