7 Nov 2016

சுபிட்சம்


கப்பல்
கவிழ்ந்த கப்பலைப் பார்த்து கன்னத்தில் கை வைக்காமல், இன்னொரு கப்பலைச் செய்து மழைநீரில் விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அம்முக்குட்டி!
*****

நினைவு
கிராமத்திற்கு ஏதோ வேலையாய்ச் சென்றவன், "நீ கந்தசாமி மவன்தானே!" என்று கேட்ட போதுதான், நினைவுக்குக் கொண்டு வந்தான் முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு வந்த தன் அப்பாவை!
*****

சுபிட்சம்
கணவன் இறந்த பின் சுபிட்சமானது லெட்சுமியின் குடும்பம் டாஸ்மாக் செலவொழிந்து.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...