ஓட்டைகள்
விழும் இடத்தைப் பொருத்து
ஓட்டைகள்
மாயங்கள் செய்கின்றன!
படகில் விழும்
ஓட்டை
மூழ்கடிக்கிறது!
புல்லாங்குழலில் விழும்
ஓட்டை
இசையைச் சுரக்கிறது!
*****
தணிகைவேல் இடம்
தண்ணீர்ப் பஞ்சம்
தணிக்கும்
தண்ணீர்ப் பந்தல்
டாஸ்மாக்!
*****
கடவுளுக்குத் தெரியாமல்...
கோயில் புறாக்கள்
என்று தெரிந்தும்
பந்தயப் புறாக்களாய்
ஆக்க நினைக்கும்
மனசை என்ன செய்ய?
கர்ப்பகிரகத்து கடவுளிடம்
வேண்டிக் கொண்டு
கோடைக்காலத்தின்
அத்தனை கோச்சிங் சென்டர்
விண்ணப்பங்களையும் வைத்து
அர்ச்சனையை முடித்துவிட்டு
சுண்டு விரல் பிடித்து
நடந்து வரும் மகனோடு
நடக்கத் தொடங்குகிறேன்
இன்று சேர்க்க இருக்கும்
கோச்சிங் சென்டரை நோக்கி!
*****
No comments:
Post a Comment