Showing posts with label In search of You. Show all posts
Showing posts with label In search of You. Show all posts

11 Jan 2025

தேடாமல் கிடைக்கும்!

தேடாமல் கிடைக்கும்!

தொலைத்ததைக் கூகுளில் தேடாதே

தொலைத்த இடத்திலும் தேடாதே

தொலைத்த இடத்தைச் சுத்தம் செய்

தொலைந்தது

தொலைத்தது எல்லாம்

தானாகக் கிடைக்கும்

*****

கஷ்டத்தை நினைத்துக்

கஷ்டப்படாதே

இதுவா பெரிய கஷ்டம்

இதை விட பெரிய கஷ்டம் வந்தால்

இது சிறிய கஷ்டம்

*****

என்ன பெரிய புஷ்பா

ஒரு நாள்

போய்தான் வர வேண்டும்

ஜெயிலுக்கு

*****

பட்டாசுகளை அப்பப்போ

வெடித்து விடு

நமத்துப் போனால் நன்றாக இருக்காது

சந்தோசங்களை அப்பப்போ

கொண்டாடி விடு

வயதானால்

கொண்டாடத் தோன்றாது

*****