Showing posts with label Single question and so many answers. Show all posts
Showing posts with label Single question and so many answers. Show all posts

18 Aug 2025

ஒரே கேள்வி ஒவ்வொருவருக்கும் வேறு பதில்

ஒரே கேள்வி ஒவ்வொருவருக்கும் வேறு பதில்

எப்படி வாழ்வது

யாருக்கு என்ன பதில் சொல்ல முடியும்

ஒரு பிச்சைக்காரருக்குச் சொல்லும் பதில்

பணக்காரருக்குப் பொருந்தாது

பணக்காரருக்குச் சொல்லும் பதில்

ஏழைக்குப் பொருந்தாது

புத்திசாலிக்குச் சொல்லும் பதில்

முட்டாளுக்குப் பொருந்தாது

முட்டாளுக்குச் சொல்லும் பதில்

அரைவேக்காடுகளுக்குப் பொருந்தாது

அரைவேக்காடுகளுக்குச் சொல்லும் பதில்

ஞானிகளுக்குப் பொருந்தாது

ஞானிகளுக்குச் சொல்லும் பதில்

குடும்பஸ்தர்களுக்குப் பொருந்தாது

குடும்பஸ்தர்களுக்குச் சொல்லும் பதில்

சூதாடிகளுக்குப் பொருந்தாது

சூதாடிகளுக்குச் சொல்லும் பதில்

சிக்கனவாதிகளுக்குப் பொருந்தாது

சிக்கனவாதிகளுக்குச் சொல்லும் பதில்

கருமிகளுக்குப் பொருந்தாது

கருமிகளுக்குச் சொல்லும் பதில்

வள்ளல்களுக்குப் பொருந்தாது

வள்ளல்களுக்குச் சொல்லும் பதில்

உலோபிகளுக்குப் பொருந்தாது

உலோபிகளுக்குச் சொல்லும் பதில்

தாராள மனமுடையவருக்குப் பொருந்தாது

தாராள மனமுடையவருக்குச் சொல்லும் பதில்

குறுகிய மனமுடையோருக்குப் பொருந்தாது

குறுகிய மனமுடையோருக்குச் சொல்லும் பதில்

குழந்தைகளுக்குப் பொருந்தாது

குழந்தைகளுக்குச் சொல்லும் பதில்

அதே குழந்தை பெரியவராகி விட்டால் பொருந்தாது

எப்படி வாழ்வது என்று

யாருக்குச் சொல்லும் பதில் யாருக்குத்தான் பொருந்தும்

அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்து

எப்படி வாழ்வது என்பது

அவரவர் முடிவு செய்து கொள்வதே பொருத்தம்

ஒற்றைப் பதில் சொன்னால்

அதில் உண்டாகும் அத்தனை திருத்தம்

*****