Showing posts with label Evolution swallowed up time. Show all posts
Showing posts with label Evolution swallowed up time. Show all posts

12 Jun 2025

பரிணாமம் எனும் காலம் விழுங்கி

பரிணாமம் எனும் காலம் விழுங்கி

முடங்கி முடங்கித்தான் எழுந்து போக வேண்டும்

முடங்கக் கூடாது என யார் சொன்னது

சோர்வில் விழக் கூடாது என கதை அளப்பதா

அழக் கூடாது என எதுவும் இருக்கிறதா

போதும் என்பதற்குக் குறைவு எதுவுமில்லை

எவருக்காக எதையும் செய்ய வேண்டியதில்லை

எவரைச் சார்ந்தும் நிற்க வேண்டியதில்லை

முடங்கிப் போக அவசியமென்ன என்றாலும்

சிறிது காலம் முடங்குவதாலும் பிழையென்ன

அப்படியானால் அப்படியே இருக்கட்டும்

அப்படியே இருக்கும் எதுவும்

அப்படியே இருப்பதில்லை

மாறிக் கொண்டே இருக்கும்

கண்களுக்குத் தெரிந்துதான் மாற வேண்டுமா

எதிர்பார்க்கும் வேகத்துக்குத்தான் மாற வேண்டுமா

சில கண்களுக்குத் தெரியும் அளவுக்கு வேகமானவை

பல கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மிக மிக மெதுவானவை

தெரிந்ததைப் போல தெரியாத மாற்றங்கள் எத்தனை

ஒரு நாள் பூகம்பம் வரும் போது

பிறிதொரு நாள் கடற்கோள் நேரும் போது

மற்றுமொரு நாள் புதிதாக மண்ணில் துளிர் விடும் போது

புல்லாகி புழுவாகி மனிதராகி எவ்வளவு மெதுவான மாற்றங்கள்

பரிணாமம் ஒரு காலம் விழுங்கி

ஆறுதல்களால் நம்பிக்கைகளால் கொன்று போட வேண்டாம்

அவசரங்களைக் காட்டி ஏமாற்ற வேண்டாம்

அவர்கள் உணர்வார்கள்

துவண்டு போதல் மெதுமெதுவாக மீண்டு வருவதற்கே

*****