Showing posts with label Peace for soul. Show all posts
Showing posts with label Peace for soul. Show all posts

16 Jul 2025

நெஞ்சாற்றுப்படை

நெஞ்சாற்றுப்படை

பலருக்கும் ரத்தத்தைப் பார்த்தால் பயம்

இது தெரியாமலா

கண்ணுக்குத் தெரியாமல்

தோலுக்குள் ஓட விட்டிருப்பார் கடவுள்

*

எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்வேன்

கவிதைக்கு விளக்கம் சொல்வதைத் தவிர

*

நல்ல நேரத்தில் கவிதை

காட்டாறாய் கிளம்புகிறது

மனைவி வந்துவிடுகிறார்

திட்டித் தீர்ப்பதற்கு

பாவம் கவிதை

வாசல் வரை வந்து

அவமானப்பட்டுத் திரும்புகிறது

மதியாதார் தலைவாசல்

இனி மிதியுமோ கவிதை

*

மழையில் நனைவது பிடிக்கும் என்றாய்

சரி நனைந்து தொலை என்றேன்

மறுநாளே ஜலதோசம் என வந்து நிற்கிறாய்

*

கவுண்டமணி

வடிவேலு

சந்தானம் இல்லாத குறையை

அரசியல்வாதிகள் தீர்த்து வைப்பார்கள்

*****