Showing posts with label Decisions behind on experience. Show all posts
Showing posts with label Decisions behind on experience. Show all posts

20 Jan 2025

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

ஏதோ ஒன்றைத் தேட

தேடுவது கிடைக்கவில்லை

என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை

இவ்வளவுதான் இப்படித்தான்

என்று எந்த முடிவையும் செய்து கொள்ள வேண்டியதில்லை

ஒவ்வொன்றும் மாறிக் கொண்டிருக்கிறது

முன்பு கருதிக் கொண்டிருந்த முடிவும்

இப்போது மாறிக் கொண்டிருக்கிறது

முடிவுகள் அனுபவங்களால் கிடைத்தவை

அனுபவங்கள் ஒவ்வொன்றும்

தவறான முடிவுகளால் உண்டானவை

சரியோ தவறோ

புதுப்பித்துக் கொண்டே

போய்க் கொண்டே இருப்பதைத் தவிர

வேறு என்ன வழியிருக்கிறது

புதுப்பித்தல்களைப் புரிந்து கொள்ள முடியாமல்

குழம்பிப் போகலாம்

எப்படியெல்லாம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை

ஒவ்வொருவருக்கும் விளக்கிக் கொண்டிருக்க முடியாது

நீங்கள் புதுப்பித்துக் கொள்ளப்பட்டிருப்பதை

நீங்கள் புரிந்து கொள்ளவே நாட்கள் பல ஆகும்

*****