Showing posts with label Irrespectable roads. Show all posts
Showing posts with label Irrespectable roads. Show all posts

17 Jul 2025

மரியாதை மறந்த சாலைகள்

மொழிபெயர்ப்பு

“மாரியம்மா சொல்லு!”

“மாரி மம்மி!”

“காளியம்மா சொல்லு!”

“காளி மம்மி!”

மழலையின் மொழிபெயர்ப்பு

******

மரியாதை மறந்த சாலைகள்

ஓணான்கள்

பாம்புகள்

அணில்கள் இறந்து கிடக்கும்

பாதையில்

இறுதி மரியாதைக்கு

நேரமில்லாமல்

நகர்ந்து கொண்டிருக்கும்

சாலைகள்

*****

தலைமுறை இடைவெளி

பழைய பாட்டி வெற்றிலைப் போடுவாள்

புதிய பாட்டி மாத்திரை போடுகிறாள்

தலைமுறை இடைவெளி

*****

இரு வீடுகள்

வீடு

எனக்கு வீடு

ஒட்டடை

சிலந்திக்கு வீடு

ஒரு வீடு

சுத்தமாகும் போது

ஒரு வீடு

சிதிலமாகிப் போகிறது.

*****

விலைவாசி

நூறு தலைமுறைக்குச் சொத்து சேர்த்தால்

ஒரு தலைமுறை வாழலாம்

விலைவாசி அப்படி

*****