Showing posts with label ஆசை. Show all posts
Showing posts with label ஆசை. Show all posts

25 Nov 2024

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான்

சிறுக சிறுக சேர்த்த பணம்

ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம்

வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி

மிச்சப்படுத்திச் சேர்த்த பணம்

டீ குடிக்காமல் காப்பி குடிக்காமல் சேர்த்த பணம்

பத்து ரூபாய் பொருளை

ஒன்பது ரூபாய்க்குப் பேரம் பேசி

ஒவ்வொரு ரூபாயாகச் சேர்த்த பணம்

கூத்து கொண்டாட்டம் குடி எல்லாம்

விட்டு விட்டு விடாப் பிடியாகச் சேர்த்த பணம்

சின்ன சின்ன ஆசைகளை நிராகரித்து

சின்ன சின்ன சந்தோசங்களை விட்டுத் தள்ளி

உண்டியலில் சேர்த்த பணத்தை

கறையான் தின்று விட்டது

பணம் சேர்க்கும் ஆசை மரித்து விட்டது

போதி மரத்துப் புத்தரின் ஆசைகளை அரித்த கறையான்

அநேகமாக இதுவாகவும் இருக்கலாம்

*****