Showing posts with label இந்தியன். Show all posts
Showing posts with label இந்தியன். Show all posts

17 Nov 2024

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே!

நீயும் என் தமிழனே! நீயும் என் இந்தியனே!

இருக்கின்ற வேலைகளை

தனியார் ஒப்பந்த வேலைகளை விடுவதற்கு

நிரந்தரப் பணிகளைத்

தற்காலிகப் பணிகளாக மாற்றுவதற்கு

விதிகளின்படி உள்ளதை

நீதிமன்றம் சென்று பெறுவதற்கு என்று

எதற்கு இருக்கிறது அரசாங்கம்

அதற்குத்தான் இருக்கிறது போலும் அரசாங்கம்

அரை நாள் முக்கால் நாள்

விடுமுறை வாங்கித் தருவதை

சாதனைகளாக நினைக்கின்ற

தொழிலாளர் இயக்கங்கள்

வாக்குறுதி கொடுத்தால்

நிறைவேற்ற வேண்டும் என்ற அவசியமில்லை என்று

நினைக்கும் அரசாங்கங்கள்

என்று குமுறி குமுறி கவிதை எழுதிக் கொண்டு

குஷாலாக இருந்தால் நீயும் என் தமிழனே

 

செயலிகள்

இணைய வழி இணைப்புகள்

அலைபேசி வழி பரிவர்த்தனைகள்

விரைவுத் துலங்கல் குறியீடுகள்

எத்தனையோ பேர் வருவதே இல்லை

இருந்தாலும் கூட்டம் தாங்கவில்லை என்று

அலுத்துக் கொள்ளும் வங்கி ஊழியர்களைப் பார்த்து

தமாஷாக இருந்தால் நீயும் என் இந்தியனே

*****