Showing posts with label ஆடும் வரை ஆட்டம்!. Show all posts
Showing posts with label ஆடும் வரை ஆட்டம்!. Show all posts

11 Dec 2024

ஆடும் வரை ஆட்டம்!

ஆடும் வரை ஆட்டம்!

நல்லதை மட்டும் பார்ப்பேன்

சரியானதை மட்டும் செய்வேன்

நேர்த்தியானதில் மட்டும் ஈடுபடுவேன்

நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்றால்

உன்னால் எதிலும் இறங்க முடியாது

எதிலும் உன்னால் ஈடுபட முடியாது

மன உளைச்சலைத் தவிர

எதுவும் உனக்கு மிஞ்சாது

யாதொன்றில் நீ இறங்கினாலும்

நல்லது கெட்டது வெற்றி தோல்வி

நான்கும் இருக்கும்

நான்கையும் எதிர்கொள்ள தயார் என்றால்

எதிலும் இறங்கு

இல்லையென்றால்

பாதுகாப்பான ஆட்டம் ஒன்று இருக்கிறது

அத்தோடு நிறுத்திக் கொள்

அது எந்த ஆட்டமானாலும் ஆட வேண்டும்

ஆடிக் கொண்டிருக்க வேண்டும்

ஆட்டத்தில் ஜெயித்துக் கொண்டு இருக்க வேண்டும்

ஒரு கட்டத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும்

அது எப்போது என்பதில்தான் இருக்கிறது

நீ

ஆடிய ஆட்டம் வெற்றியா தோல்வியா

என்பதை முடிவு செய்ய

ஜெயித்த பின் தோற்றால்

ஜெயித்ததற்கு மரியாதை இல்லாமல் போய் விடும்

தோற்ற பின் ஜெயித்தால்

தோல்விக்கும் ஒரு மரியாதை வந்து விடும்

******