Showing posts with label Poetry Shop. Show all posts
Showing posts with label Poetry Shop. Show all posts

15 Oct 2024

வளர்க நும் கவிதைக் கடை

வளர்க நும் கவிதைக் கடை

இன்று ஒரு கவிதை இல்லாமல் போய் விட்டதே

என்ன கொடுமை ஐயா

ஒரு கவிதை ஒரே ஒரு கவிதை

கூடுதலாகச் சுட்டால் குறைந்தா போய் விடுவீர்

கவிதை வடை சுடும் கவிப்பித்தரே

ஒரே ஒரு கவிதை

கூடுதலாகப் போட்டுத் தந்தால் குறைந்தா போய்விடுவீர்

கவிதைத் தேநீர் போடும் கவிக்கிறுக்கரே

ஒரே ஒரு தட்டுக் கவிதை

கூடுதலாகக் கொண்டு வந்து வைத்தால்

குறைந்தா போய் விடுவீர் உணவு விடுதியின் கவிச்சேவகரே

என்ன நடக்கிறது என்பது தெரியாதா எனக்கு

நிறைய கவி உணவுகள் மீந்து வீணாகி விட்டதாகக்

குளிர்பதனப் பெட்டியில் வைத்து

மறுநாளுக்குத் தயார் செய்யும் கவி முதலாளியே

அதிலொரு புழுத்த கவி வறுக்கியை

எடுத்து வீசக் கூடாதோ

இப்போது ஒரு கவிதை வடை மட்டும்

எலிக்காகப் பொறியில் காத்திருப்பது

தெரியாது என்றா நினைக்கிறீர்கள்

வாழ்க உங்கள் கவிதைப் பணி

வளர்க நும் கவிதைக் கடை

*****