5 Nov 2016

இரசாயனச் சிந்தனைகள்


இரசாயனச் சிந்தனைகள்
தாய்ப்பாலும்
இல்லாமல் போனது
பசும்பாலும்
இல்லாமல் போனது
பாக்கெட் பால் குடிக்கும்
மனம் முழுவதும்
இரசாயனச் சிந்தனைகள்!
*****

செளகர்யங்கள்
"செளகர்யமா?"
என்றே தொடங்க
வேண்டியிருக்கிறது
செளகர்யமற்ற
உரையாடல்களையும்!
*****

அடையாளம்
ஏதோ ஒரு காலத்தில்
கட்டப்பட்ட பாலம்தான்
அடையாளப்படுத்திக் கொண்டு
இருக்கிறது
அதை நதியென!
அதுவும் சாக்கடையைச் சுமந்து
ஓடிக் கொண்டிருக்கிறது
ஏதோ விதியென!
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...