Showing posts with label மாநகரக் குறிப்புகள். Show all posts
Showing posts with label மாநகரக் குறிப்புகள். Show all posts

19 Dec 2024

மாநகரக் குறிப்புகள்

மாநகரக் குறிப்புகள்

இந்த மாநகரின் மழைக்காலத்தில்

காய்ச்சல் வந்தால்

மருத்துவரிடம் ஓர் ஊசி

அத்துடன் தற்காப்பிற்காக

ஒரு கோப்பை கபசுர குடிநீர்

இனி நிம்மதியாகத் தூங்கலாம்

*****

நகரங்களுக்குச் சென்ற பிறகுதான்

புரிந்து கொண்டேன்

மேம்பாலம் இல்லை என்றால்

அது நகரம் இல்லை

நான்கைந்து மேம்பாலங்கள் இல்லை என்றால்

அது மாநகரம் இல்லை

*****

மாற்றங்களை எதிர்த்தால்

சிக்கன் பிரியாணியோடு

நின்று கொள்ள வேண்டியதுதான்

ஷவர்மா கிடைக்காது

சாவும் கிடைக்காது

*****

என்னுடன் பேச யாருமில்லையா

ஏன் நான் இல்லையா

நான் எனக்கு நானேதான் பேசிக் கொள்கிறேன்

*****