Showing posts with label Prayer of a tree. Show all posts
Showing posts with label Prayer of a tree. Show all posts

30 Apr 2025

நடுக்கத்தின் இரு அத்தியாயங்கள்

நடுக்கத்தின் இரு அத்தியாயங்கள்

எதற்கும் கலங்காத

ஊர் நடுவே நின்ற பெருமரம்

இரண்டு முறை நடுங்கியது

புயல் காற்றைக் கண்டு

பயப்படாமல்

தொங்குமொரு

பறவைக் கூட்டை நினைத்து

ஒரு முறை நடுங்கியது

வேரோடு சாய்ந்தும்

சேதாரமின்றி

தொங்கும் கூட்டை நினைத்து

மற்றுமொரு முறை நடுங்கியது

அறுவை இயந்திரத்தின்

பற்சக்கரங்கள் பட்ட போது

*****