Showing posts with label Once in a life. Show all posts
Showing posts with label Once in a life. Show all posts

13 May 2025

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள்

சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள்

எவ்வளவோ விளக்கங்கள்

எத்தனையோ தத்துவங்கள்

எண்ணிச் சொல்ல முடியாது

அவ்வளவு ஆறுதல்கள்

அத்தனை அழுகைகள்

கணக்கிட்டுக் கொள்ள முடியாது

சிலர் சோகமாக இருப்பார்கள்

சிலர் சிரித்துக் கொண்டு இருப்பார்கள்

கண்ணீர் அஞ்சலி பதாகைக்காக

மெனக்கெடுவார்கள்

பெரிய மாலை கிடைக்கவில்லையே என்று

விசனப்படுவார்கள்

எல்லாம் ஒரு முறை

நேர்ந்துவிட்ட மரணத்துக்காக

இன்னொரு முறை நேரும் என்றால்

யாரும் அவ்வளவு சங்கடப்பட்டிருக்க மாட்டார்கள்

*****