10 Oct 2026

இன்டர்வெல் இல்லாத திரையரங்கம்

இன்டர்வெல் இல்லாத திரையரங்கம்

ஹீரோயின் மேக்கப்பை விஞ்சும்

வெண்திரையின் மூலைகளில் பச்சைப் பாசி

உடைந்த சீட்டுகளுக்கு நடுவே

எலிப் புழுக்கையின் வாசனை

கூரை ஓட்டை வழியே

மழைநீரின் நேரடி ஒளிபரப்பு

டிக்கெட் தேவையில்லை

நனைந்தபடி பார்க்கலாம்

சூன்யத்தில் மிதக்கும்

துருப்பிடித்த புரொஜெக்டர்

வெற்று ஹாலில் மவுனத்தில்

சுழலாத மின்விசிறியின் ஈனஸ்வரம்

வயிற்றுப்பசியில் கத்தும்

பறவைகளின் பிண்ணனி இசை

எல்லாவற்றையும் ரசித்தபடி

உடைந்து கிடக்கும் கட் அவுட்டில்

இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்

வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் பிரஜையைப் போல

அந்தக் கால சூப்பர் ஸ்டார்

*****

No comments:

Post a Comment