1 Sept 2026

இந்தி படித்தால் வேலை கிடைக்குமா?

எப்போது புது வருடம் பிறக்கிறது?

காலண்டரும் டைரியும் இலவசமாக வரும் போது…

*****

அடையாளத்திற்காக அடிக்கடி ஆதார் அட்டையைக் கேட்கும் போது உங்கள் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கிறது?

அந்த ஆதாரில் இருப்பது நானா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது! அதை வைத்து எப்படி என்னை அடையாளம் காண்கிறார்களோ?!

*****

தெருவுக்கு நான்கு டிரான்ஸ்பார்மர்கள் இருந்தால் எப்படி இருக்கும்?

ரோடு ஷோ நடத்தும் சில தலைவர்களுக்கு வசதியாகத்தான் இருக்கும்.

*****

இருபது ரூபாய் நாணயத்தைப் பார்க்கும் போது என்ன தோன்றுகிறது?

அடுத்து ஐம்பது ரூபாய் நாணயம் கூட கிடையாது, ஸ்ட்ரைட்டாக நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் நாணயம்தான்.

*****

அரசியலில் அப்பா – மகன் மோதலை எப்படித் தவிர்ப்பது?

வயதுக்கு வந்ததும் தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள் என்று வீட்டை விட்டு, Sorry கட்சியை விட்டே துரத்தி விட்டு விட வேண்டும்.

*****

அரசியலில் ஏன் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை?

கட்சியை விட்டுத் தூக்கியவர்கள் எல்லாம் கூட்டணியில் வந்து சேர்ந்து விட்டால் எதிரியாவது நண்பனாவது?

*****

எதிர்பாராத கூட்டணி என்பது என்ன?

மீந்துப் போன இட்டிலியோடு, வீணாய்ப் போன வெங்காயம் சேர்ந்து இட்டிலி உப்புமாவாக வந்து நிற்பதுதான்.

*****

இந்தி படித்தால் வேலை கிடைக்குமா?

இந்திப் படித்து இந்திக்காரனாகித் தமிழ்நாட்டுக்கு வந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும்.

*****

ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் விலைவாசியைக் குறைப்போம் என்று அரசியல்வாதிகள் வாக்குறுதி கொடுக்கிறார்களே! எந்த தைரியத்தில் அப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுக்கிறார்கள்?

எதுவாக இருந்தாலும் அது ஆறு மாதத்தில் பழகி விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்தத் தைரியத்தில்தான் குறைக்கவே முடியாத விலைவாசியைக் குறைப்போம் என்று வாக்குறுதியை வாரி வழங்குகிறார்கள்.

*****

எவ்வளவுதான் வெச்சு செஞ்சாலும் அமெரிக்காவை இந்தியா எதுவும் செய்யாமல் இருக்கிறதே?

வெச்சு செய்யுற அவனுங்களுக்கே அலுக்காத போது, அதெ வாங்கிக்கிற நமக்கு அலுக்கவா போவுது.

*****

No comments:

Post a Comment