ராஜபாட்டை
யாரோ
சிலர்தான் மருத்துவர்கள் ஆகிறார்கள்
யாரோ
சிலர்தான் பொறியாளர்கள் ஆகிறார்கள்
யாரோ
சிலர்தான் ஆட்சியராகிறார்கள்
யாரோ
சிலர்தான் நட்சத்திரமாக மின்னுகிறார்கள்
இந்த
யாரோ சிலருக்காக
எல்லாரும்
வாழ்க்கையைப் பணயம் வைக்கிறார்கள்
தங்கள்
சுயத்தை இழக்கிறார்கள்
சந்தோசத்தைத்
தனித்தன்மையை இழந்து விட்டு
நிராசைகளைச்
சுமக்கிறார்கள்
ஆயிரத்தில்
ஒருவராக
லட்சத்தில்
ஒருவராக
கோடியில்
ஒருவராக
முயல்வதை
விட
நீங்கள்
ஏன் நீங்களாக முயலக் கூடாது
எல்லாரும்
மருத்துவரானால்
யாருக்கு
யார்தான் மருத்துவம் பார்ப்பது
எல்லாரும்
பொறியாளர் ஆனால்
யாருக்கு
யார்தான் வீடு கட்டுவது
எல்லாரும்
ஆட்சியரானால்
யாருக்கு
யார்தான் ஆட்சி செய்வது
நீங்கள்
விரும்பும் வழியில் செல்லுங்கள்
யாரோ
விரும்பச் சொல்லும் வழியில் செல்லாதீர்கள்
இன்னொருவருக்காக
நீங்கள் வேறொருவர் ஆனால்
நீங்கள்
ஓர் அடிமை
உங்கள்
விருப்பமான வழியில் நீங்கள் ஓர் அடிமையானாலும்
நீங்கள்
ஒரு ராஜா
*****
No comments:
Post a Comment