வண்டியின்
முடக்கமும் சக்கரத்தின் இயக்கமும்
ஒரு
முறை தெளிவித்தது
மறுமுறை
உதவாது
ஒவ்வொரு
முறையும் தெளிவி
முடக்கம்
மோசமுமன்று
இயக்கம்
வெற்றியுமன்று
இரண்டையும்
கலந்து
முடங்கும்
போது முடங்கி
இயங்கும்
போது இயங்கி
புரிந்து
கொள்ள வேண்டுமென்றால்
வண்டியின்
முடக்கத்தில்
சக்கரத்தின்
இயக்கம்
மாறுவதும்
மாறாததும்
அதனதன்
போக்கு
அதனதன்
போக்கை
அடித்து
நொறுக்குவது
இயற்கையின்
போக்கு
நிலைத்தது
நிலையாது போகும்
நிலையாதிருப்பது
நிலையென ஆகும்
எதற்கும்
நீ ஒன்றும்
வாலாட்ட
முடியாது
உன்
ஆயுள் சிறிது
இயற்கையின்
ஆயுள் பெரிது
உன்
சாம்பலின் எச்சம்
உன்
தலைமுறையே அறியாது
விரும்பினாலும்
விரும்பாது போனாலும்
அனுபவங்கள்
அரங்கேறும்
முடிவெடுக்க
தயங்குவதால்
முடிவில்லாமல்
போகாது
முடிவும்
முடிவு ஆகாது
முடிவு
என்பதும் தொடக்கம் என்பதும்
அவரவர்
பார்வை
*****
No comments:
Post a Comment