மாற்றத்தின்
கீர்த்தனம்!
மெனக்கெடல்
தேடல்
காரியசித்தி
அலைச்சல்
குழப்பம்
உளைச்சல்
குளறுபடி
குளத்தில்
இறங்காமல்
குளிக்க
முடியாது
நதியில்
இறங்காமல்
நீராட
முடியாது
குளம்
நதி
இரண்டும்
ஒன்றல்ல
குளத்தின்
துளியில்
மீண்டும்
நீராடலாம்
நதியின்
நீராடலில்
ஒவ்வொரு
முறையும்
வெவ்வேறு
துளிகள்
மாறிக்
கொண்டிருப்பதை
மாறாமலிருக்கச்
செய்ய முடியாது
புதுமைக்கான
வழி மாற்றம்
மாற்றிப்
போட்டு உருவாக்குவது
அதன்
குறியீடு
புதுமைக்குப்
பொதுமை கிடையாது
பொதுமையில்
புறப்பட்டு புதுமை வராது
புதுமை
தனித்துவமானது
ஒவ்வொரு
முறையும் புதுமை புதுமையாகத்தான் இருக்கும்
கொஞ்சம்
மாற்றுவது ஏமாற்றுவது
மொத்தத்தையும்
உருவி
உருமாற்றும்
ரசவாதம் புதுமை
பழைமைப்
பிடித்தம் என்பதற்காக
புதுமை
உருமாற்றிப் போடாமல் இருக்காது
*****
No comments:
Post a Comment