மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
பிழைப்பு
அப்பா
மூட்டைத் தூக்கிப் பிழைத்தார்
மகன்
தண்ணீர் கேன் தூக்கிப் பிழைக்கிறான்
பேரன்
ஆக்சிஜன் சிலிண்டர் தூக்கிப் பிழைப்பான்
கொள்ளுப்பேரன்
வேறு கிரகத்திற்குத் தூக்கிப் போனால்தான் பிழைப்பான்
*****
No comments:
Post a Comment