பரிணாமம்
எனும் காலம் விழுங்கி
முடங்கி
முடங்கித்தான் எழுந்து போக வேண்டும்
முடங்கக்
கூடாது என யார் சொன்னது
சோர்வில்
விழக் கூடாது என கதை அளப்பதா
அழக்
கூடாது என எதுவும் இருக்கிறதா
போதும்
என்பதற்குக் குறைவு எதுவுமில்லை
எவருக்காக
எதையும் செய்ய வேண்டியதில்லை
எவரைச்
சார்ந்தும் நிற்க வேண்டியதில்லை
முடங்கிப்
போக அவசியமென்ன என்றாலும்
சிறிது
காலம் முடங்குவதாலும் பிழையென்ன
அப்படியானால்
அப்படியே இருக்கட்டும்
அப்படியே
இருக்கும் எதுவும்
அப்படியே
இருப்பதில்லை
மாறிக்
கொண்டே இருக்கும்
கண்களுக்குத்
தெரிந்துதான் மாற வேண்டுமா
எதிர்பார்க்கும்
வேகத்துக்குத்தான் மாற வேண்டுமா
சில
கண்களுக்குத் தெரியும் அளவுக்கு வேகமானவை
பல
கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மிக மிக மெதுவானவை
தெரிந்ததைப்
போல தெரியாத மாற்றங்கள் எத்தனை
ஒரு
நாள் பூகம்பம் வரும் போது
பிறிதொரு
நாள் கடற்கோள் நேரும் போது
மற்றுமொரு
நாள் புதிதாக மண்ணில் துளிர் விடும் போது
புல்லாகி
புழுவாகி மனிதராகி எவ்வளவு மெதுவான மாற்றங்கள்
பரிணாமம்
ஒரு காலம் விழுங்கி
ஆறுதல்களால்
நம்பிக்கைகளால் கொன்று போட வேண்டாம்
அவசரங்களைக்
காட்டி ஏமாற்ற வேண்டாம்
அவர்கள்
உணர்வார்கள்
துவண்டு
போதல் மெதுமெதுவாக மீண்டு வருவதற்கே
*****
No comments:
Post a Comment