ஒரு
பிரகாசத்தின் பின்னணிகள்
மறுபடியும்
துவங்கு
முடியும்
என்று தோன்றாது
முன்முடிவுகள்
குழப்பும்
குழப்பங்களைத்
தூக்கித் தூர வை
முடிவுகள்
எப்படி வேண்டுமானாலும் மாறும்
இப்படித்தான்
நடக்கும் என்று எதுவுமில்லை
எதுவும்
நடக்கலாம்
எதையும்
யாரும் முடிவு செய்து விட முடியாது
முன்முடிவுகள்
தவறாக வழி நடத்துகின்றன
முடிவுகளை
நீ எடுக்க முடியாது
ஏதோ
சில முடிவுகள் கட்டுபடலாம்
எல்லாமும்
கட்டுபடாது
அதற்காக
மேம்போக்காக இருந்து விட முடியாது
மேம்போக்கில்
பிரச்சனைகள் இல்லை என்று நினைக்கலாம்
பிரச்சனையே
அதுதான்
நிறைய
பிரச்சனைகள் சிக்கல்கள்
அது
பாட்டுக்கு வரும் போகும்
எதுவும்
நிலையல்ல
கற்றுக்
கொள்ள நினைப்பவருக்கு
பிரச்சனைகளும்
சிக்கல்களும் அதிகம்
ஆழ்ந்து
போகாமல் அகழ்ந்தெடுக்க முடியாது
அலுப்பில்
ஆக்கங்கள் விளையாது
சோம்பலில்
சரித்திரங்கள் பிரகாசிக்காது
மெனக்கெடாமல்
மீனைப் பிடிக்க முடியாது
உயரே
உயரே செல்லாமல் வீண்மீனை எட்டிப் பிடிக்க முடியாது
முடிவாக
ஒரு முடிவு என்னவென்றால்
எதுவும்
ஒரு நாளில் நடந்து விடாது
தன்னைத்
தேய்த்துக் கொள்ள விரும்பாமல்
ரத்தினங்கள்
பிரகாசிக்காது
*****
Well said
ReplyDelete