கதைக்
குறிப்புகள்
நேற்று
ஒரு கதை படித்தேன்
கதையின்படி
நடக்க ஆரம்பித்தன சம்பவங்கள்
பாத்திரங்கள்
உருள ஆரம்பித்தன
தத்துவங்கள்
சத்தமிடத் துவங்கின
அவர்களுக்குப்
பிடித்த மாதிரி
நீங்கள்
இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்
உங்களுக்குப்
பிடித்த மாதிரி
யாரும்
இருக்க மாட்டார்கள்
அப்படி
இருப்பது மன உளைச்சல் என்றால்
நீங்கள்
ஏன் அப்படி இருக்கிறீர்கள்
எப்படி
இருந்தால் உங்களுக்கு
மன
உளைச்சல் இருக்காதோ
அப்படியே
இருங்கள்
புதிதாகச்
சொல்ல என்ன இருக்கிறது
உனக்கு
என்ன நேர்கிறதோ
நீ
என்ன உணர்கிறாயோ
அவை
அனைத்தும் புதிது
எல்லாருக்கும்
எல்லாமும் புதிதாக இருக்காது
உனக்குப்
புதிதாக இருப்பது
இன்னொருவருக்கு
பழையதாக இருக்கும்
இன்னொருவருக்குப்
பழையதாக இருப்பது
உனக்குப்
புதிததாக இருக்கும்
ஒருவருக்கு
இருப்பது போலவே
எல்லாருக்கும்
எல்லாமும் இருக்குமா என்ன
கதை
முடிந்தது
ஆட்டம்
காலி
படுதா
மிச்சம்
வெறிச்சோடி
கிடக்கும்
ஏகாந்த
நிலப்பரப்பில்
சருகைச்
சுழற்றி
விளையாடிக்
கொண்டிருக்கிறது காற்று
*****
No comments:
Post a Comment