கிரிக்கெட் ஆடும் தெருக்கள்
ஊர்த் தெருவை
கிரிக்கெட்
மைதானமாக்கி
விளையாடும்
சிறுவர்களுக்கு
அவ்வழியே செல்பவர்கள்
கேட்ச் பிடித்துக்
கொடுக்கிறார்கள்
பந்து எடுத்துப்
போடுகிறார்கள்
கைதட்டி, விசிலடித்துச்
செல்கிறார்கள்
கெஞ்சி கேட்டு
ஒரு சிலர்
மட்டை பிடித்துச்
செல்கிறார்கள்
பால்யத்தின்
நினைவுகளை
மீட்டிக் கொள்ளும்
சிறு பொழுதில்
குழந்தைகளாகி
மீண்டும் பெரியவர்களாகி
தங்கள் கடமை
நோக்கி ஓடுகிறார்கள்
பெரியவர்களைக்
குழந்தைகளாக்கி
கிரிக்கெட்
விளையாடிக் கொண்டிருக்கின்றன
ஊருக்கு இப்படிச்
சில தெருக்கள்.
*****
No comments:
Post a Comment