பிரம்ம ராட்சசர்களின் ஆணை
காலம் காலமாக
துணிகளை
அழுக்குப்
போக அடித்து துவைத்து
மடித்து வைத்துக்
கொண்டிருக்கிறேன்
அழுக்காக்கி,
துவைத்து, மடிப்பது
தொடர்ந்து
கொண்டிருக்கிறது
அதிகார ஆதிக்க
அழுக்கும்
சாதீய அசிங்கமும்
நிலைத்த வடிவம்
போலாகி விட்ட
வெளுக்காத
மனசு அப்படியே இருக்கிறது
யுகம் யுகமாய்
அழுக்கும்
கறையும் அசிங்கமும்
சீருடை என
ஆகி விட்ட சமூகத்தில்
இரட்டைக் குவளையில்
ஒன்றுதான்
மிரட்டும்
தொனியில் நீட்டப்படுகிறது
இரட்டைப் பணமற்ற
ஒற்றைப் பணம் கேட்கும்
கல்லாக்களில்
அமர்ந்திருக்கும்
பிரம்ம ராட்சசர்களின்
ஆணைப்படி!
*****
நன்றி -
ஆனந்த விகடன் இதழ் 06.12.2017 - பக்கம் 26
No comments:
Post a Comment