மணி நேரம்
"ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்திருந்தா
காப்பாத்தியிருக்கலாம்!" என்று சொல்லி விட்டு, அடுத்த பேஷண்டின் நிலைமைப் பற்றிச் சொன்னார் டாக்டர், "24 மணி நேரம் கழித்துதான் எதையும் சொல்ல முடியும்!"
*****
முகம்
"டாஸ்மாக்கை மூடுங்கள்!" என தலைவரோடு குரல் எழுப்பி விட்டு, கூட்டம் முடிந்ததும்
நுழைந்தான் டாஸ்மாக்கிற்கு.
*****
வயல் / ரியல்
நெல்லை நட்டு மதிப்பிழந்த வயலுக்கு, கல்லை நட்டதும் வந்தது மதிப்பு!
*****
மதிப்பு
குழாயில் ஒழுகிக் கொண்டிருந்த வரையில் வராத மதிப்பு, வந்ததது, பாட்டிலில் அடைக்கப்பட்டப்
பிறகு தண்ணீருக்கு.
*****
வெயில்
வீட்டின் ஓரத்தில் இருந்த ஒற்றை மரத்தையும் வெட்டிய பின் புலம்பினான், "ஸ்! ஸ்! அப்பப்பா!" என்ன வெயில்!"
*****
No comments:
Post a Comment