8 Nov 2016

வண்ணம் எடுத்தல்


வழி
வேறு வழியில்லாமல்தான்
சொல்கிறேன் என்பவர்களுக்குத்
தெரியும்
அதுவும்
ஒரு வழியென்று!
*****

வண்ணம் எடுத்தல்
ஒளி கொடுத்த
மலர்களிடமிருந்து
வண்ணம் எடுத்து
வானவில்லாக்குகிறது
வானம்!
*****

சாத்தியங்கள்
எளிதாக இருக்கிறது
திட்டி விடுவது
கஷ்டமாக இருக்கிறது
சமாதானம் செய்வது
கிளையை வெட்டுவதும்
ஒட்ட வைப்பதும் போல!
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...