கலைந்தோடும் ஓவியங்கள்
சேறாய்
வழிந்தோடுகிறது
மழை ஓவியம்!
*****
நம்பிக்கை
நீ அழைத்திருக்க மாட்டாய்
என்று தெரிந்தும்
திரும்பிப் பார்க்கிறேன்,
அழைப்பாய் என்று
மனதுக்குள் மறைந்திருக்கும்
நம்பிக்கையை
மறுக்க முடியாமல்!
*****
கஷ்டங்கள்
குழந்தையாய் இருப்பது
கஷ்டம் என்பாய்!
மெய்தான்
எளிமையாய் இருப்பதன்
கஷ்டம் அது!
*****
தடை
செய்யப் போகும்
ஒரு உதவியை
தடுத்து விடுகிறது
நன்றி கெட்ட
ஒரு மனிதன் குறித்த
நினைவு!
*****
பழி தீர்த்தல்
கடைசியில்
எளிதாக
பழி தீர்க்க முடிகிறது
செய்ய முடிந்த உதவியைச்
செய்யாமல்!
*****
No comments:
Post a Comment